Homeசெய்திகள்தமிழ்நாடு'தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!'

‘தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!’

-

 

'தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!'

தமிழகத்தில் பிற்பகல் 03.00 மணி நிலவரப்படி சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 03.00 மணி நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மக்களவைத் தொகுதியில் 60.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவள்ளூர்- 48.67%, வடசென்னை- 44.84%, தென்சென்னை- 42.10%, மத்திய சென்னை- 41.47%, கள்ளக்குறிச்சி 59.02%, ஸ்ரீபெரும்புதூர்- 45.96%, காஞ்சிபுரம்- 53.06%, அரக்கோணம்- 51.98%, வேலூர்- 51.19%, கிருஷ்ணகிரி- 53.37%, தருமபுரி- 25.66%, திருவண்ணாமலை- 53.72%, ஆரணி- 56.73%, விழுப்புரம்- 54.43%, நாமக்கல்- 59.55%, ஈரோடு- 54.13%, நீலகிரி- 53.02%, கோவை- 50.33%, பொள்ளாச்சி- 53.14%, திண்டுக்கல்- 53.43%, கரூர்- 59.56%, திருச்சி 49.27%, பெரம்பலூர்- 56.34%, கடலூர்- 50.94%, சிதம்பரம்- 55.23%, மயிலாடுதுறை- 50.91%, நாகை- 54.07%, தஞ்சை- 51.40%, சிவகங்கை- 51.79%, மதுரை- 47.38%, தேனி- 51.43%, விருதுநகர்- 52.47%, ராமநாதபுரம்- 51.16%, தூத்துக்குடியில் 50.41%, தென்காசி- 51.45%, நெல்லை- 48.58%, கன்னியாகுமரி- 51.12% வாக்குகளும் பதிவாகியுளதாக தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா!

சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவிகிதம் மந்தமாகவே உள்ளது. அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் 45.43% வாக்குகள் பதிவாகியுள்ளது.

MUST READ