spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா!

குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா!

-

- Advertisement -

 

குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா!

we-r-hiring

நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இதனால் தமிழகத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்துடன் வந்த நடிகர் சூர்யா, தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, நடிகர் சிவக்குமார், அவரது மனைவி, மகன் கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தினர்.

பாஜகவின் பருப்பு வடை ஊசி தான் போகும் -அமைச்சர் டி.ஆா்.பி.ராஜா

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, “அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகர் விக்ரம், நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ