spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!

-

- Advertisement -

 

we-r-hiring

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (ஏப்ரல் 19) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (ஏப்ரல் 19) சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!

காலை 08.00 மணி முதல் காலை 11.00 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் ஒவ்வொரு 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்; அதிகாலை 05.00 மணி முதல் காலை 08.00 வரையும், காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், இரவு 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ