spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்

 நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்

-

- Advertisement -

 நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட்  பகுதியில் மின்சார கோபுரம் மேல் ஏறி தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

we-r-hiring

ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது உடன் வேலை செய்த தனராஜ் என்பவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்

இதன் தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் வீரமணி என்பவருக்கு சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. சோக்காஸ் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து என் மீது எந்த தவறும் இல்லை நிர்வாகம் ஒரு தரப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறி இன்று காலை ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள  உயர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தொழிலாளர் நலத்துறை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் பேச்சு வார்த்தை  நடத்தி அவரை மின்சாரக்  கோபுரத்தின்  மேல் இருந்து இறக்கினர்.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ