spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதென்காசியில் நடைபெறும் 'வீர தீர சூரன்' ஷூட்டிங்.... துஷாரா விஜயன் பங்கேற்பு!

தென்காசியில் நடைபெறும் ‘வீர தீர சூரன்’ ஷூட்டிங்…. துஷாரா விஜயன் பங்கேற்பு!

-

- Advertisement -

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தென்காசியில் நடைபெறும் 'வீர தீர சூரன்' ஷூட்டிங்.... துஷாரா விஜயன் பங்கேற்பு!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து நடிகர் விக்ரம், வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற அருண்குமார் இயக்கி வருகிறார். ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்களுடன் இணைந்து சித்திக், சுராஜ் வெஞ்சர மூடு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகர் விக்ரம் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என சமீப காலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பாக மதுரையில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது.
தென்காசியில் நடைபெறும் 'வீர தீர சூரன்' ஷூட்டிங்.... துஷாரா விஜயன் பங்கேற்பு! இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தென்காசி சென்றுள்ளனராம். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அதில் துஷாரா விஜயன் பங்கேற்றுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் இணைந்து இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்த நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ