நயன் – விக்கி தம்பதி திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய யோகி பாபு உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் நயன் – விக்கி இருவரும் சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பல புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபடத் தவறுவதில்லை. அந்த வகையில் ஏற்கனவே கன்னியாகுமரியில் இருக்கும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
அதேசமயம் திருச்செந்தூர் முருகனையும் தரிசனம் செய்தனர். இதற்கு காரணம் யோகி பாபு என்று சொல்லப்படுகிறது. அதாவது நடிகர் யோகி பாபு தீவிர முருக பக்தன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகிகளிடம் பேசி சிறப்பு ஏற்பாடு செய்து தந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
நடிகை நயன்தாராவுடன் இணைந்த யோகி பாபு ஏற்கனவே கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தர்பார், ஐரா, விஸ்வாசம் போன்ற படங்களிலும் நயன்தாரா, யோகி பாபு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதே சமயம் கடந்தாண்டு வெளியான ஜவான் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக நயன்தாரா, யோகி பாபு கூட்டணியில் மண்ணாங்கட்டி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.