- Advertisement -
கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் திரைப்படம் தேர்வாகி உள்ளது.

இந்திய சினிமாவின் இளம் பெண் இயக்குனர் பாயல் கப்பாடியா. பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான குறும்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர் ‘எ நைட் ஆப் நோவிங் நத்திங்’ என்ற திரைப்படத்தின் மூலம் மேலும் புகழ்பெற்றார். தற்போது இவர் இயக்கி உள்ள புதிய படம் தான் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் ‘தக்ஸ்’ படத்தில் நாயகனாக நடித்த ஹிருது ஹாரூன் தான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாக்யாக கதம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இத்திரைப்படம் வரும் 23-ம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதோடு போட்டி பிரிவிலும் இடம் பெறுகிறது. உலகளவில் மிகவும் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் உள்ளிட்டோரின் திரைப்படங்களுடன் இத்திரைப்படமும் போட்டியிடுகிறது.



