ராயப்பேட்டை மிர்பாஷி அலி தெருவைச் சேர்ந்த ஜாவித் சைபுதீன் (30), பர்மா பஜாரில் லேப்டாப் கடை நடத்தி வருகிறார். அடையாளம் தெரியாத 4 பேர் மே 17ம் தேதி அன்று ஜாவித்தை கடத்தியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸார் தேடிவந்துள்ளனர். அதில் சோனியா, ஷாஜி/ 43 மற்றும் சக்திவேல் /35) ஆகியோரை போலீஸார் முதலில் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களை விசாரித்த போது, மே 17ம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஜாவித் சைபுதீன்- க்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆர்.ஏ.புரம் கற்பகம் அவென்யூ 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விருந்துக்கு என இரவு நோரத்தில் வருமாறு அழைத்திருக்கிறார். ஜாவித் அவருடைய காரில் அந்த பெண் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு மற்றொரு காரில் வந்த 4 பேர் அவரை மிரட்டி கடத்தியுள்ளனர். பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துவிட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இதில் மேலும் ஒருவரையும் போலீஸார் கைது செய்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்-ல் ஒப்படைத்துள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. பின்னர் இதில் ஈடுபட்ட சோனியா வேலூரைச் சேர்ந்தவர் என்பதும் அவர் அடிக்கடி இரவு கிளப்புக்கு செல்லக் கூடியவர் என்பதும் கிள்ப்பில் வைத்து தான் அவருக்கு கடத்தல்காரர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது மற்றும் ஜாவித் சைபுதீனையும் சந்தித்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.