- Advertisement -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் இன்று(19.02.2023) காலை திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஐந்து மாதத்திற்கு முன்பு இதே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான காலணிகள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பல் ஆனது குறிப்பிடத்தக்கது.
