spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைது

இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைது

-

- Advertisement -

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பைக்கில் அசுர வேகத்தில் சாலையில் சாகசம் காட்டிய வாலிபர் மீது 8 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் நிகேஷ் (19).இவர் துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் படுத்தபடி அசுர வேகத்தில் வாகனத்தை ஒட்டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

we-r-hiring

இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த இளைஞர் கைதுஇதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் புலிவலம் போலீசார் வாலிபர் நிகேஷ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ