spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருட்டு - இளைஞர் கைது

கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருட்டு – இளைஞர் கைது

-

- Advertisement -

சென்னையில் கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருடி வந்த இளைஞரை திருடும்போது தரமணி தனிப்படை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

 

we-r-hiring

கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருட்டு - இளைஞர் கைது

சென்னை தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடைகளின் மேற்கூரை ஓட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

புகார்களின் அடிப்படையில் தரமணி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில் தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதவன் பாலாஜி, தலைமை காவலர்கள் மகேஷ், உதயகுமார், கர்ணா, ஹரி, கோபி மற்றும் அடையாறு மாவட்ட சரக சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் அரங்கேறிய பகுதியின் அருகில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பழைய குற்றவாளி சென்னை அசோக் நகரை சேர்ந்த காசி என்பது தெரியவந்தது.

கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருட்டு - இளைஞர் கைது

சுமார் 125 சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த காசி பெருங்குடி ரயில் நிலையத்தின் மேற்கூரையில் படுத்து உறங்கி கொண்டிருந்தது தெரியவந்தது.

மகேஷ், உதயகுமார், கர்ணா உள்ளிட்ட தனிப்படை போலீசார் பெருங்குடி ரயில் நிலைய மேற்கூரைக்கு சென்று பார்த்தபோது அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசாரை பார்த்ததும் தப்பித்து ஓட முடியன்றபோது தனிப்படை போலீசார் ரயில் நிலைய மேற்கூரையில் மேலே மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் – apcnewstamil.com

மேலும் தனி ஒரு ஆளாக தொடர்ந்து கடைகளின் மேர்கூரையை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்தது தெரியவந்துள்ளது. பகலில் எங்கும் வெளியில் வராமல் பெருங்குடி ரயில்வே நிலையம் மேற்கூரையின் உச்சியில் படுத்து உறங்கி விட்டு இரவு 12 மணிக்கு மேல் மட்டும் வெளியே வந்து கடைகளின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி திருடும் வழக்கம் கொள்கையாக கடைபிடித்து வருவதாகவும் காசி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கடைகளின் மேற்கூரையை உடைத்து திருடும் பணத்தை வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் காசி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கௌடா கைது (apcnewstamil.com)

திறமையாக செயல்பட்டு யாரிடமும் சிக்காமல் இருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞரை கைது செய்த தரமணி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில் தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதவன் பாலாஜி, தலைமை காவலர்கள் மகேஷ், உதயகுமார், கர்ணா, ஹரி, கோபி மற்றும் அடையாறு மாவட்ட சரக சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி ஆகியோர் கொண்ட தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

MUST READ