spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நடிகர் தர்ஷன் - காதலி பவித்ரா கௌடா கைது

நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கௌடா கைது

-

- Advertisement -

நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கௌடா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் தர்ஷன் - காதலி பவித்ரா கௌடா கைது

we-r-hiring

சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா சுவாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் நகரில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை காவல்துறையினர் கால்வாயில் இருந்து கண்டெடுத்து கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்தனர்.

நடிகர் தர்ஷன் - காதலி பவித்ரா கௌடா கைது

கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமி கடந்த சில மாதங்களாக கன்னட சினிமா உலகின் முன்னணி நடிகரான தர்ஷன் அவரது காதலி பவித்ரா கௌடா என்பவரையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரேணுகா சுவாமி உடல் கண்டெடுக்கப்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் சுமார் ஐந்து நபர்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

நடிகர் தர்ஷன் - காதலி பவித்ரா கௌடா கைது

விசாரணையின் முடிவில் நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கௌடா ஆகிய இருவரும் அடியாட்களுடன் சேர்ந்து பெங்களூரு நகரில் உள்ள ஒரு கேரேஜில் வைத்து ரேணுகா சுவாமியை அடித்து துன்புறுத்தி உள்ளனர் என்றும் அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் கண்டுப் பிடித்துள்ளனர்.

மேலும் குற்ற செயலில் ஈடுபட்ட பத்து நபர்களை ஏற்கனவே காவல்துறை கைது செய்த நிலையில் இன்று அதிகாலை மைசூர் நகரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடிகர் தர்ஷன் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மறுபுறம் பவித்ரா கௌடாவையும் காவல்துறை காவலில் எடுத்து இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CzV7nPaPo-x/?utm_source=ig_web_copy_link

கொலை செயலில் ஈடுபட்ட 10 நபர்கள் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகிய இருவரின் செல்போன் எண்கள் கொலை நடந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்ததை காவல்துறை தொழில்நுட்ப ரீதியாக உறுதிப்படுத்தி உள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது… கொலை வழக்கில் தொடர்பு என தகவல்…. (apcnewstamil.com)

ஒருபுறம் செல்போன் டவர் உதவியுடன் இருவரும் கொலை நடந்த இடத்தில் இருந்ததை உறுதி செய்த காவல்துறை கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களிடமும் தர்ஷன் மற்றும் பவித்ரா குறித்த தகவல்களை வாக்குமூலமாக பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கௌடா ஆகியோரை அதிகாரப்பூர்வமாக கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

MUST READ