spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் பெண்கள் பயன் - சுகாதாரத்துறை

மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் பெண்கள் பயன் – சுகாதாரத்துறை

-

- Advertisement -

 

மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் பெண்கள் பயன் -  சுகாதாரத்துறை

we-r-hiring

மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மூலம் 43 லட்சம் பெண்கள் பயனடைவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கிராமப்புறங்களில் 10-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!

மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பருவப் பெண்களிடையே அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் கிராமப்புறங்களில் உள்ள இளம்பெண்கள் உயர்தர சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதை அதிகரிக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சானிட்டரி நாப்கின்களை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய. இத்திட்டம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு 17 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 107 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

தற்போது 43 லட்சம் மாணவிகள் பயன் பெறும் விதமாக தமிழகத்தில் ”மாதவிடாய் சுகாதார திட்டம் மூலம்“ மாணவிகளுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பலர் இன்னும் மாதவிடாய் நேரங்களில் துணிகளை பயன்படுத்துகின்றனர் இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 43 லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில், பருவமடைந்த மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நாப்கின் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ