spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாI.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

-

- Advertisement -

உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பை I.I.T. மெட்ராஸ் துவங்கியுள்ளது.

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

we-r-hiring

இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் எம்.பி.ஏ. கல்வித் திட்டத்தை, ஐஐடி மெட்ராஸின் இயக்குனர் வி.காமகோடி துவக்கி வைத்தார்.

உலகம் முழுவதும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் மற்றும் கடல் சார் பொறியியல் துறைகளும் தொழில் பங்குதாரரான ஐ மெரிடைம் கன்சல்டன்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

இந்த இரண்டு வருட Digital Maritime and separate chain கல்வியில், கடல் சார் வர்த்தகம் மற்றும் வினியோக சங்கிலி மேலாண்மையில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் அம்சங்களை புகுத்தும் வகையில், உலகளவிய நிபுணர்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்களை இளங்கலை பட்டத்தில் பெற்றவர்களும் குறைந்தது இரண்டு ஆண்டு முழு நேர பணி அனுபவம் உள்ளவர்களும் இத்துறைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் இந்த ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டோர் இந்த எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்து கொள்ளலாம் என ஐ.ஐ.டி. மெட்ராஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

கப்பல் மூலம் இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்று வரும் காரணத்தால், அதனை சரியான முறையில் திறனுடன் மேலாண்மை படுத்துவது, குறித்த நேரத்தில் கண்டெய்னர்களையும் சரக்குகளையும் சேர்ப்பதற்கு திட்டமிடுதல் உள்ளிட்ட செயல்முறைகள் அடங்கிய பாடத்திட்டமே இந்த எம்.பி.ஏ. படிப்பாகும்.

இதற்காகவே பிரித்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டம், கடலுக்கு உள்ளேயும் கடலுக்கு வெளியேவும் இருந்து பணியாற்ற, வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை ஆட்கள் தேவைப்படும் சூழலால், ஓசேன் இன்ஜினியரிங் துறையுடனும் எம்.பி.ஏ. துறையுடனும் இணைந்து இந்த புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என காம கோடி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் நடிகர் விஜய்க்கு சீமான் பாராட்டு! (apcnewstamil.com)

இந்தியாவின் விக்ஷித் பாரத் 2047 என்ற திட்டத்தின்படி கடல்சார் துறை மூலம் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம் இருப்பதால், இதனை பயிலும் அனைவரும் பெரிய அளவில் வேலைவாய்ப்பு பெற தகுதி உள்ளவர்களாக வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கப்படும் இந்த இரண்டு வருட எம்.பி.ஏ. பாடத்திட்டத்துக்கு, ஒன்பது லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும்
ஐ.ஐ.டி. மெட்ராஸின் இயக்குனர் காமகோடி விவரித்தார்.

MUST READ