
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. புதன் கிழமை தினம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,660க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்படது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,000க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,328க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,685க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ரூ.94.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


