Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிருக்கு ரூ.1000- பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: முக ஸ்டாலின்

மகளிருக்கு ரூ.1000- பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: முக ஸ்டாலின்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Image

பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். நிதிநிலை சரியாக இல்லாதஹ்டால் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மகளிர் உரிமைத் தொகை குறித்து நீங்களே மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். இது ஸ்டாலின் வார்த்தை. எடப்பாடியின் வார்த்தை இல்லை. திமுகவின் அடித்தளமே ஈரோடுதான், கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரிக்க கலைஞர் மகன் வந்துள்ளேன். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்.என் உயிரோடு கலந்தது ஈரோடு. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

we-r-hiring

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். ஈ.வி.கே.சம்பத்தின் மகனுக்காக கருணாநிதியின் மகன் வாக்குகேட்டு வந்திருக்கிறேன். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவான் இந்த ஸ்டாலின். நான் சாதாரன ஸ்டாலின் அல்ல “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் கண் டாக்டரிடம் பார்த்து கண்ணாடி வாங்கிப் போடுங்கள். கஜானாவை காலி செய்துவிட்டு போய் விட்டீர்களே அதனை சரி செய்து உரிமைத் தொகை தருவோம்.

Image

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 85% பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். ஓரிரு திட்டங்கள் பாக்கி இருக்கிறது. வருகிற ஓராண்டிற்குள் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். முந்தைய அதிமுக அரசு மட்டும் நிதி நிலைமையை ஒழுங்காக வைத்திருந்தால், மகளிர் உரிமைத் தொகையை எப்போதோ வழங்கிருப்போம்” எனக் கூறினார்.

MUST READ