spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா900 கோடியை கடந்தும் தமிழ்நாட்டில் ஒர்க் அவுட் ஆகாத 'கல்கி 2898AD'!

900 கோடியை கடந்தும் தமிழ்நாட்டில் ஒர்க் அவுட் ஆகாத ‘கல்கி 2898AD’!

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியான திரைப்படம் தான் கல்கி 2898AD. இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார். பாக்ஸ் ஆபீஸில் 900 கோடியை கடந்தும் தமிழ்நாட்டில் ஒர்க் அவுட் ஆகாத 'கல்கி 2898AD'!மேலும் அமிதாப் பச்சன், பசுபதி, தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருந்தார். வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று சுமார் 900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என பட குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். 900 கோடியை கடந்தும் தமிழ்நாட்டில் ஒர்க் அவுட் ஆகாத 'கல்கி 2898AD'!அதைத்தொடர்ந்து ஆயிரம் கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் வசூலில் பட்டையை கிளப்பும் இந்த படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை எனவும் இதனால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்கள் கல்கி 2898AD படத்தால் தமிழ்நாட்டில் எந்த லாபமும் இல்லை என புலம்புகிறார்களாம். எனவே இனிவரும் நாட்களிலாவது தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ