Homeசெய்திகள்ஆவடிஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது   

ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது   

-

- Advertisement -

ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

ஆவடியில் போக்கு வரத்து காவல் துறையினர், இமாலையும் பைக் ரேசர் இணைந்து ஹெல்மெட் அணிய வேண்டிய தேவை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைத்தினர்.

ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், ஆவடி போக்குவரத்து காவல் சார்பில், தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

we-r-hiring

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் உதவி ஆணையர் ராமச்சந்திரன் கொடியசைத்து  இருசக்கர வாகன பேரணியை தொடங்கினார்.

ஆவடி போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்து வார்டன்கள், இமாலையும் பைக் ரேசர் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக ஆவடி செக்போஸ்டில் இருந்து, அம்பத்தூர் ஓட்டி, ஸ்டேட் போர்டு மருத்துவமனை வரை அங்கிருந்து ஆவடி காவல் ஆணையரகம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்தன.

இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், ஆகவே, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதில் ஏராளமான போக்குவரத்துக் காவலர்கள், வார்டன்கள், பைக் ரேசர் கலந்து கொண்டனர். இறுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டுநர்களை மறித்து அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார்.

MUST READ