தமது தொகுதியான ஶ்ரீபெரும்பதூரில் நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே தாம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் 127- வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசும் தொழிற்சங்கங்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்றார்.
தொழிலாளர் நலனை பாதுகாத்து வரும் தமிழகஅரசு, முதலமைச்சர் இவ்விவகாரத்தை கனிவுடன் கையாண்டு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக, நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
ஹரியானா தேர்தலில் பிஜேபியின் வெற்றி, கோல்மாலால் விளைந்தது என்று சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.தேசிய தேர்தல் ஆணையம் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மல்யுத்த வீராங்கனை வினோத் போக ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொடர்பான கேள்விக்கு?
அந்த வீராங்கனையது வெற்றியை, தேசத்தின் வெற்றியாகவே பார்ப்பதாக செல்வப்பெருந்தகா தெரிவித்தார்.