spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsபள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து - ஒன்றிய கல்வி அமைச்சகம்...

பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து – ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

-

- Advertisement -

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்துகடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, மாணவர்கள் தேர்ச்சி பெறாதபோதும், அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்பட்டனர்.

we-r-hiring

இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். மாணவர்கள் ஆரம்பக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இறுதித் தேர்வில் தோல்வியடைவோர் 2 மாதத்தில் மீண்டும் மறுதேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல முடியும் என கூறப்படுகிறது.

மறுதேர்விலும் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். எனினும், மாணவர்கள் 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ