spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 ரூபாய் லஞ்சம் - வசமாக சிக்கிய விஏஓ

வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 ரூபாய் லஞ்சம் – வசமாக சிக்கிய விஏஓ

-

- Advertisement -

ஈரோட்டில் வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 லஞ்சம் வாங்கிய ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது .

we-r-hiring

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் தனது பெரிய மாமனாருக்கு வாரிசு சான்றிதழ் வேண்டுமென்று, ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு விஏஓ ருத்ரசெல்வன் வாரிசு சான்றிதழ் வேண்டுமென்றால், 50,000 (லஞ்சம்) பணம் வேண்டும் என்று கூறி முதலில் 5000 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வாங்கியுள்ளார்.

இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஆனந்தன் புகார் அளித்த நிலையில், அங்கு சென்று மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாக்கி 45 ஆயிரம் லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனிடம் தந்த போது, அவரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடித்தனர்.

பின்பு அவரிடம் இருந்து 45 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து, விஏஓ ருத்ரசெல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ