HomeBreaking Newsகாவல்துறையின் கொடூரம்..! லாக்-அப்பில் தண்ணீர் கேட்டவருக்கு ஆசிட் கொடுத்த போலீஸ்

காவல்துறையின் கொடூரம்..! லாக்-அப்பில் தண்ணீர் கேட்டவருக்கு ஆசிட் கொடுத்த போலீஸ்

-

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் குற்றம்சாட்டப்பட்டவர் லாக்கப்பில் இறந்த விவகாரம் இன்னும் அடங்கவில்லை. இப்போது உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் லாக்கப்பில் இருந்த ஒருவருக்கு தண்ணீருக்கு பதிலாக போலீசார் ஆசிட் கொடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இதனால், லாக்கப்பில் இருந்தவரின் உடல்நிலை மோசமடைந்தது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர்

.

அம்ரோஹாவில் உள்ள் சைதங்கலி காவல் நிலையத்தில் லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் தண்ணீர் கேட்டபோது காவலர்கள் ஆசிட் கொடுத்துள்ளனர். காவல்துறையும் அந்த இளைஞரை தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அவர் தண்ணீர் கேட்டபோது, ​​போதையில் இருந்த போலீசார் அவருக்கு ஆசிட்டை கொடுத்துள்ளார்.

இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால், முதலில் சைதங்கலியில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீரட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது குடலில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறி மருத்துவர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.

தகவலின்படி, அக்டோபர் 14 ஆம் தேதி இரவு, சைதாங்கலி காவல் நிலையத்திற்கு வெளியே இரண்டு மாணவர்களிடையே சண்டை ஏற்பட்டது. இதற்கிடையில், சம்பல் மாவட்டத்தின் பன்சுகா மிலாக் கிராமத்தில் வசிக்கும் தர்மேந்திர சிங், சண்டையை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

தர்மேந்திரா விளக்கம் அளித்தும் போலீசார் செவிசாய்க்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர், இதற்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

MUST READ