தென்ந்திந்தியாவின் பிரமாண்டமான ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி கட்டப்பட்ட பொருத்தமாக அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பாலம் சூட்டியதற்கு பொதுமக்கள் வரவேற்பு.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில், தென்னிந்தியாவின் மிக நீண்ட பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்ட நிலையில், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இதனை திறந்து வைத்தார். ஜி.டி.நாயுடு குடும்பத்தார் இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு முதல்வரால் கெளரவிக்கப்பட்டனர்.
கோவையின் முன்னோடியும், இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் விஞ்ஞானியுமான ஜிடி நாயுடு அவர்களின் பெயரை, இந்த பாலத்திற்கு சூட்டி, கோவை மக்களுக்கும் ஜிடி நாயுடுக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் கௌரவம் செய்துள்ளார். 1791 கோடி மதிப்பீட்டில் ஐந்தாண்டுகளாக கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக தமிழ்நாடு மாநிலத்தின் நிதி மட்டுமே பயன்படுத்தி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கோல்ட்வின்ஸ் பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் வரையில் அவிநாசி சாலையில் நான்கு இந்த பிரம்மாண்டமான உயர்மட்ட சாலை கட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டன.
மேம்பாலம் குறித்து நெடுஞ்சாலை சிறப்பு திட்டங்கள் கோவை கோட்ட பொறியாளர் முனைவர் சமுத்திர கணி “ஜெர்மன் டெக்னாலஜி, பசுமைக்கு முக்கியத்துவம், பயணத்துக்கான விசாலமான சாலை, ஒலி மாசு இல்லாத சாலை பயணம், 250 மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் என கட்டப்பட்ட இந்த உயர்மட்ட சாலை (மேம்பாலம்) ஒரு மாடல் மேம்பாலமாக திகழும் என்று நம்புகின்றோம் என தெரிவித்துள்ளாா்.
அவரைத் தொடர்ந்து கோபால் (ஜி.டி. நாயுடு மகன்) பேசுகையில், “நாங்கள் கோரிக்கை விடுக்காமலே என் தந்தையார் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றி. நாளிதழ்களில் பார்த்தே நான் இதனை தெரிந்துகொண்டேன். கோவை உயர்மட்ட சாலைக்கு வைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு பாலம் என பெயர் சூட்டியிருப்பது பொருத்தமானது. கோவையின் தொழில் வளர்ச்சிக்கு இப்பாலம் பெருமளவில் உதவும். எந்த ஊரிலும் இல்லாத வசதியாக 10 நிமிடத்தில் நகரின் முக்கிய பகுதியில் இருந்து விமான நிலையம் செல்லும் வகையில் இந்த உயர்மட்ட சாலை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தினை ஏற்படுத்தி தந்தவராக இருக்கின்றார் நம் முதல்வர் மு.க. ஸ்டாலின். முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்” என ஜிடி நாயுடு மகன் கோபால் தெரிவித்திருந்தாா்.
அதேபோல் ஜி.டி.நாயுடு பேரன் ராஜ்குமார், “நகரின் மையத்திலிருந்து 10 நிமிடத்தில் விமான நிலையம் அடையும் வசதியை முதல்வர் ஏற்படுத்தி வந்திருக்கின்றார். எந்த ஊரிலும் இல்லாத வசதி கோவைக்கு வந்துள்ளது. தொழில்துறை கண்காட்சி நடக்கும் இடத்துக்கும் விமான நிலையத்துக்குமான பயணம் 5 நிமிடமே. கோவையின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும் இப்படி ஒரு பாலத்துக்கு என் தாத்தா பெயர் சூட்டியிருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இத்தருணத்தில் முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்திக்கொள்கின்றோம்” என ஜி.டி.நாயுடு பேரன் ராஜ்குமார் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் கூறியிறுபதாவது,”கோவையின் வளர்ச்சிக்கு 50 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கருணாநிதி அவர்கள் மேம்பாலத்தினை கொண்டு வந்து கோவை வளர்ச்சிக்கு உதவினார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் மட்ட மேம்பாலம் கட்டி கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றார். முதல்வருக்கு கோவை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்க கடமைபட்டிருக்கின்றேன்” என முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் கூறியுள்ளாா்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பேசியதாவது,”கோவையின் ஐகானாக உள்ள ஜி.டி. நாயுடு பெயரை பாலத்துக்கு சூட்டிய முதல்வருக்கு நன்றி. காலை மற்றும் மாலையில் இன்ச் பை இன்சாக அவிநாசி சாலையில் வாகனங்கள் நகரும். இந்த பாலத்தால் பயண நேரம் பெருமளவில் சேமிக்கப்படுகின்றது. 45 நிமிடத்தில் சென்ற பயணம் இப்போது 15 நிமிடமாக குறைந்தது. இந்த பாலத்தால் பயண நேரம் பெருமளவில் சேமிக்கப்படுகின்றது. காலேஜ், ஹாஸ்பிடல், கமெபெனிகளுக்கு போவோருக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் தொழில்துறை சரக்குகளை எடுத்து செல்ல இந்த பாலம் பயனுள்ளதாக அமைந்து இருக்கின்றன. நாங்கள் கோவையின் அழகை ரசித்தபடி உயர்மட்ட சாலையில் ஜாலியாக பயணிக்கின்றோம். இந்த தருணத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றோம்” என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தவெக ம.செ. மதியழகனை விசாரிக்க எஸ்.ஐ.டிக்கு 2 நாட்கள் அனுமதி..