இன்றைய (அக்.28) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துது. கிரமிற்கு ரூ.150 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,300க்கும், சவரனுக்கு ரூ.1200 குறைந்து 1 சவரன் ரூ.90,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் மதிப்பு கடந்த சிலநாட்களாக சிறிது குறையத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் சற்று நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஆர்வம் குறைந்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் சரிவை கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு


