spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஜி.எஸ்.டி. திருத்த அறிவிப்பால் குறையும் பொருட்களின் விலை… இன்ப அதிர்ச்சியில் மக்கள்

ஜி.எஸ்.டி. திருத்த அறிவிப்பால் குறையும் பொருட்களின் விலை… இன்ப அதிர்ச்சியில் மக்கள்

-

- Advertisement -

தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தான் அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.ஏனெனில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலையை குறைத்து இருக்கிறது.இன்ப அதிர்ச்சி! குறையும் விலை – ஜி.எஸ்.டி. திருத்த அறிவிப்புநாட்டின் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஜி.எஸ்.டி. (GST) வரி விதிப்பில் திருத்தங்களை அறிவித்தார். புதிய வரி மாற்றங்கள் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாம் வீட்டில் தினமும் உபயோகப்படுத்தக்கூடிய மளிகை சாமான்கள் , குழந்தைகளுக்கான ஸ்டேஷ்னரி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ,மருந்துகள் என பலவற்றின் விலையையும் குறைத்திருக்கிறது. இது சாமானிய மக்களின் பட்ஜெட்டில் கணிசமாக ஒரு  சேமிப்பை கொண்டு வரும்.

வரி விலக்கு பெறும் பொருட்கள்,

we-r-hiring
  • பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முழுமையாக ஜி.எஸ்.டி. விலக்கப்பட்டுள்ளது.
    33 உயிர் காக்கும் மருந்துகள் ஜி.எஸ்.டி. விலக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
    தனிநபர் மருத்துவ காப்பீடு (Health Insurance) மீதும் இனி ஜி.எஸ்.டி. இல்லை.
  • குறையும் வரிவிதிப்பு,
    வெண்ணெய், நெய், தின்பண்டங்கள் : பழைய வரி 12% – புதிய வரி 5%,
    தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பு, பற்பசை, சோப்புகள் : 5% ஜி.எஸ்.டி. மட்டும்.
    குழந்தைகள் பாட்டில், டயப்பர் : வரி குறைப்பு.
  • 1200 சிசி கார்கள், 350 சிசி இருசக்கர வாகனங்கள் : 28% இல் இருந்து 18% ஆக குறைப்பு.
  • வீட்டு உபயோகப் பொருட்கள்,
    ஏசி, டிவி, பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் : 18% ஜி.எஸ்.டி. (தற்போதைய விகிதம் தொடரும்).
  • வேளாண் உபகரணங்கள்,
    நீர் தெளிப்பான், சொட்டு பாசன உபகரணங்கள் : 12% இல் இருந்து 5% ஜி.எஸ்.டி.
    டிராக்டர்கள் மற்றும் பாகங்கள் : 18% இல் இருந்து 5% ஆக குறைப்பு.
  • அதிகபட்ச வரி விதிப்பு (40%)
    சிகரெட், பான் மசாலா, புகையிலை பொருட்கள் : 40% ஜி.எஸ்.டி.
    1500 சிசி மேல் சொகுசு கார்கள் : 40% ஜி.எஸ்.டி.

இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், அத்தியாவசிய மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்து பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், சிகரெட், புகையிலை மற்றும் சொகுசு பொருட்கள் பயன்படுத்துவோர் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

தண்ணீர் டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

MUST READ