spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதண்ணீர் டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

தண்ணீர் டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

-

- Advertisement -

கடலூரில் தண்ணீர் உள்ள டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தண்ணீர் டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி!கடலூா் கே.என்.பேட்டையை சோ்ந்த சிவசங்கரன் மற்றும் அவரது மனைவி ஞானசௌந்தரி என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. மூத்தமகள் குணஸ்ரீ மட்டும் தனியாக வீட்டிலிருந்த தண்ணீா் உள்ள டப்பில் அருகில் அமா்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது, தலைக்குப்புற கவிந்து விழுந்து உள்ளாா். இதன் காரணமாக அந்த மூச்சுத் திணறி துடிதுடித்து இறந்துள்ளாா. இதனை அறியாத அவரது தந்தை சிவங்கரன் இளைய மகளோடு விளையாடிக் கொண்டுள்ளாா். சிறிது நேரம் கழித்து குணஸ்ரீ காணோம் என்று  வீடு முழுவதும் தேடிப் பாா்த்து உள்ளனா். அப்போது  வீட்டில் இருந்த தண்ணீா் உள்ள டப்பில் விளையாடும் போது தவறி விழுந்துள்ளாா். குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை கண்ட அவரது பெற்றோா்கள் செய்வதறியாமால் தவித்தனா்.

அருகிலிருந்தவா்கள் அலறல் சத்தம் கேட்டு வந்தனா். உடனடியாக குழந்தையை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த டாக்டா்கள் குழந்தை ஏற்கெனவே உயிாிழந்துவிட்டதாக தெரிவித்தனா். மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் தாய், தந்தை, உறவினர்கள் கதறி அழுதனர். தண்ணீர் டப்பாவில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.

பட்டியலினத்தவரை மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? – அன்புமணி ஆவேசம்

we-r-hiring

 

 

MUST READ