HomeBreaking Newsமனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி!

மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி!

-

- Advertisement -

மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி!

இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பது பாரதிராஜாவின் கனவாக இருந்தது. அதன்படி மனோஜ் பாரதிராஜாவை, தன்னுடைய இயக்கத்தில் உருவான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதை கடந்த இவர் வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் ஆகிய வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் மனோஜின் நடிப்பில் வெளியான மற்ற சில படங்கள் தோல்வியை சந்தித்தது. எனவே அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் மனோஜுக்கு கிடைக்கவில்லை.மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி! அடுத்தது அன்னக்கொடி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவர், ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தான் 48 வயதுடைய மனோஜுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மனோஜ் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட நேற்று (மார்ச் 25) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி!இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி, சேரன், சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கவிஞர் வைரமுத்து, மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார்.

MUST READ