HomeBreaking News‘எங்கள் மீது குற்றம்சாட்டப்படவே இல்லை’-அடியோடு மறுக்கும் அதானி குழுமம்

‘எங்கள் மீது குற்றம்சாட்டப்படவே இல்லை’-அடியோடு மறுக்கும் அதானி குழுமம்

-

கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகையில் எந்த லஞ்சக் குற்றச்சாட்டிலும் சிக்கவில்லை என்பதை அதானி குழுமம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

கௌதம் அதானி மற்றும் ஏழு பேர் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் மூத்த நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க அதிகாரிகள் தாக்கல் செய்த லஞ்ச வழக்கு குற்றப்பத்திரிகையில் அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாக குற்றம் சாட்டப்படவில்லை’’என்று அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.

"ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்"- கவுதம் அதானி அறிவிப்பு!
File Photo

அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் முக்கிய நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்கும் சோலார் மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர்களை லஞ்சம் கொடுக்கும் திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்படவில்லை. இந்த இயக்குநர்கள் மீது குற்றவியல் குற்றப்பத்திரிகையில் பத்திர மோசடி சதி, மோசடி சதி, பத்திர மோசடி ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என அந்த அறிக்கைய்ல் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான வழக்கில் அமெரிக்க நீதித்துறையால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. தங்களை தற்காத்துக் கொள்ள கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் தொடரும் என்பதனை அதானி குழுமம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் பற்றி ஊடகங்களில் பரவும் தகவல்களை நிராகரிக்க வேண்டும். அவை தவறாக வழிநடத்துகிறது. தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க இந்த விளக்கத்தை வெளியிடுவது அவசியம்’’ என்றும் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழும நிர்வாகிகள் 1933 இன் செக்யூரிட்டி சட்டம் மற்றும் 1934 இன் செக்யூரிட்டீஸ் சட்டம் ஆகியவற்றின் சில பிரிவுகளை மீறியதாகவும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் சட்டங்களை மீறுவதற்கு உதவியதாகவும் சிவில் புகாரில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அதானி குழுமத்தின் குழு சிஎஃப்ஓ ஜுகேஷிந்தர் ராபி சிங், ‘‘சவால்கள் இருந்தபோதிலும் உண்மை வெல்லும் என்கிற நம்பிக்கை உள்ளது. உண்மை வெளிவரத் தொடங்குகிறது. பொறுமையாக இருக்கும் எங்கள் நேர்மையை மதிக்கும் அனைவருக்கும், உங்கள் ஆதரவுக்கு நன்றி. அப்பட்டமான பொய்கள், நெறிமுறையற்ற, பொறுப்பற்ற அறிக்கைளால் நாங்கள் ஒரு கடினமான போரில் இருக்கிறோம். இருப்பினும், உண்மை இறுதியாக வெளிவரும்” என்று அவர் எக்ஸ் பதிவிட்டு இருந்தார்.

MUST READ