கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பின. இதனை அடுத்து அணைகளுக்கு வரும் உபரிநீர்
முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர்
திறக்கப்பட்டுள்ளது. கே .ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி, கபினியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியும்
நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
இதனிடையே காவிரியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் ஈரோடு மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிப்பு