“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது” அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என வாசகத்துடன் கூடிய சுவரொட்டி மேலூர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் நகர் முழுவதும் “டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது” என்றும் அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என்ற வாசகத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் என் டி ஏ கூட்டணி சார்பில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மற்றும் பாஜக எனும் டபுள் எஞ்சின் கொண்ட ரயில் தமிழ்நாட்டில் ஓடும் என பேசி இருந்தார். இதற்கு பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று மேலூர் நகரில் பென்னிகுவிக் பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பெரியகடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் “டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது” என்றும் அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என்ற வாசகத்துடன் என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்களை ஓடாத ரயில் பெட்டியோடு இணைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவரொட்டியில் ஒட்டியவர்கள் யார் அச்சடித்த நிறுவனம் எது என்ற போன்ற விபரங்கள் எதுவும் இல்லாததால் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…


