spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி

நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி

-

- Advertisement -

ஆவடி அருகே நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி.

சென்னை, அயனாவரம், கே.கே.நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் இவரது மகன் லோகேஸ்வரன் 1ஞாயிறு மாலை வீட்டிலிருந்து நண்பர்கள் 6 பேருடன், ஆவடி, திருமுல்லைவாயல், அசோக் நகர் அருகில் உள்ள, கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளனர்.அப்போது, லோகேஸ்வரன் கால்வாய் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து விளையாடும் போது, நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரமானதால் போலீசார் தேடுதல் பணியை முடித்து திரும்பி சென்றனர்.

நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி2-ஆம் நாளான இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறை அதிகாரியிடம் கேட்டபோது நீரின் வேகத்தன்மை அதிகமாக உள்ளதால் தங்கள் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் நீரின்வேக தன்மை குறைந்துள்ளதால், தீவிரமாக தேடுதல் பணியை தொடர்ந்து செய்து வருவதாகவும், தெரிவித்தார்.

we-r-hiring

லோகேஸ்வரனை தேடும் பணியில் ஆவடி தீயணைப்பு துறையினரும் மற்றும் பொதுமக்களும் வலைகளைக் கொண்டு சடலத்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.ஆனால் தற்போதுவரை சடலம் மீட்க படாததால், லோகேஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தாய், தந்தை என அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தந்தை குமார் தாய் வாசுகி கண்ணீர் மல்க தன் மகனின் சடலத்தை விரைவில் மீட்டுத் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ