spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்

போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்

-

- Advertisement -

போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில் ரூ.3.42 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்தில் 151 வது வார்டுக்கு உட்பட்ட சின்னப்போரூர் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் கட்டுமான நிறுவனம் சார்பில், ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் 154வது வார்டுக்கு உட்பட்ட ராமாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், மதுரவாயல் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் உணவுக்கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா  சின்னப் போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்

we-r-hiring

இதில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமை தாங்கினார். இவ்விழாவில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில்  தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

MUST READ