spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

-

- Advertisement -

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS – BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

போட்டி தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று (நவம்பர் 1) முதல் தொடங்கியுள்ள நிலையில், 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இப்போட்டித் தேர்வு 07.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. எனினும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 2ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

என்ன தகுதி?

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில்( Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பணியிடங்கள்

* தமிழ் பாடம் – 371 பணியிடங்கள்,

* ஆங்கிலப் பாடம் – 214 பணியிடங்கள்,

* கணிதப் பாடம் – 200 பணியிடங்கள்,

* இயற்பியல் பாடம் – 274 பணியிடங்கள்,

* வேதியியல் பாடம் – 273 பணியிடங்கள்,

* வரலாறு பாடம் – 346 பணியிடங்கள் உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Co எவ்வளவு?

36,400 ரூபாய் முதல் 1,15,700 ரூபாய் வரை.

எந்தெந்தப் பள்ளிகளில் என்னென்ன காலி இடங்கள்?

* பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம்- 2171

* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம்- 23

* ஆதிதிராவிடர் நலத்துறை – 16

* மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – 12

வயது வரம்பு

பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

  1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு

தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

  1. பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு

150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

  1. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் முன்பதிவுக்கு முன்னர்,

https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IlFva2IxUEN3R2F2YSsxL21tR203dGc9PSIsInZhbHVlIjoidmIxaEZqbVNWQ3dGQ2FhZnI0Q0ExUT09IiwibWFjIjoiMjZjYmM4N2RhYzY4NTkzZTVkNjgwMGQwZDhmNzk1N2Q5YzU1OTcyYzQ1MDVhNmI5ZTQ4MzlkYTc0YTQyZTA3ZCIsInRhZyI6IiJ9

என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.

அதையடுத்து https://trb1.ucanapply.com/login

என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். தொடர்ந்து போதிய தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்களைப் பெற:

https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf

என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in

MUST READ