spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநடிகர் குமரி முத்து;கலையுலக உடன் பிறப்பு!

நடிகர் குமரி முத்து;கலையுலக உடன் பிறப்பு!

-

- Advertisement -

நடிகர் குமரி முத்து;கலையுலக உடன் பிறப்பு!

நீரை மகேந்திரன்

தி.மு.கழக வரலாற்றில் இடம்பிடித்த தீரர்களை வாராவாரம் இங்கு நினைவுகூர்ந்து வருகிறோம்.அந்த வகையில், பெரியாரின் தொண்டராக, அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாகப் பயணித்து, கழகம் வளர்த்த நடிகர் குமரி முத்து அவர்களின் வரலாற்றைப் பார்க்கவாம்.

we-r-hiring

இன்றைக்கு எத்துனையோ நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்றைக்கு ஒரு இடம் நாளைக்கு ஒரு இடம் என மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அது அவர்களின் சுபாவம். ஆனால் குமரிமுத்து அப்படி இல்லை. இன்றைக்கு வாழ்க என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு எத்தனை மனகசப்புகள் வந்தாலும் ஒழிக எனது கூறமாட்டார். அதற்குக் காரணம் தன்னுடைய இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவைக் கேட்டு, கழகத்தின் அபிமானியாக மாறியவர்” என முத்தமிழறிஞர் கலைஞர் போற்றிய உடன்பிறப்பு நடிகர் குமரி முத்து.

”நகைச்சுவை நடிகர், கலையுளகில் கழகத்தின் கொள்கை முழக்கமாக விளங்கியவர். கலைவாணர் என்.எஸ்.கேவை போலவே குமரி மாவட்டத்திலிருத்து கலைத்துறைக்கு வந்த குமரி முத்து அவர்களும் கலைவாணர் போலவே சிரிக்கவும் சித்திக்கவும் வைக்கும் நகைச்சுவையை நமக்கு வழங்கியவர். தன் வாழ்நாளின் இறுதி வரை உறுதிமிக்க தி.மு.க.காரராக வாழ்த்தவர்” என இன்றைய கழகத் தலைவர் உணர்வுபூர்வமாக உரைத்தச் சான்று.

குமரி முத்து அவர்களின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புதூர்.1940 – ஆம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று பிறந்தவர். பள்ளிப்பருவத்திலேயே நாடகங்கள் மீது காதல் கொண்ட முத்து, அப்போதே சொந்தமாக நாடகங்கள் நடத்தி இருக்கிறார். எட்டாம் வகுப்போடு புத்தகப்பைக்கு விடை கொடுத்துவிட்டு. நாடகங்களில் முழுநேரமாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அந்த வகையி தனது 14 வயதிலேயே 1954 – ஆம் ஆண்டுவாக்கில் கலைத்துறைக்கு வந்தவர். சென்னை வந்த தொடக்கத்தில் சின்ன சின்ன மேடை நாடகங்களில் நடித்தவர்.  எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் இணைந்து ஆறு ஆண்டுகள் அந்த குழுவினருடன் பயணித்துள்ளார். பின்னர் 1964 – ஆம் ஆண்டு முதல், திரைப்படங்களில் குமரி முத்துவாக நடிக்கத் தொடங்கி, தனது தொழில் வாழ்க்கையில் 700 படங்களுக்கும் மேல் நடித்தவர்.

கழக அடிப்படை உறுப்பினர்
தனது வழக்கமான சிரிப்பால் அறியப்பட்ட நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் என்றாலும் குமரிமுத்து அவர்கள், தனது இளவயது காலம்தொட்டே கழகத்தின் அடிப்படை உறுப்பினர். கழக மேடைகளில் கொள்கை முழக்கமிட்ட சிறந்த சொற்பொழிவாளர். கழகத்தின் கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்த கொள்கைப் பெருமை கொண்டவர்.

குமரி முத்து அவர்கள், சினிமாவுக்கு முதல்தலைமுறை நடிகா் அல்ல. அவரது சகோதரர் நம்பிராஜன் அந்நாளில் மேடை மற்றும் சினிமா பிரபலம் எம்.ஆர்.ராதா நாடகக்குழுவில் இருந்தவர். பராசக்தியில்  பூசாரியாக வருபவர்தான் நம்பிராஜன். கலை ஆர்வமும், திராவிட இயக்க அரசியல் ஈடுபாடுமாக இருந்த குமரி முத்து பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு, இருபது வயதிலேயே கழக அரசியல் கொள்கைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

தலைவர் கலைஞசர் மீது அளப்பரிய அன்பும் மரியாதையும் கொண்டவர் குமரிமுத்து. கழகம் பற்றாளராக இருந்த அவரை முத்தமிழறிஞர் கலைஞர் முழுமையாக அரசியல் செயல்பாடுகளில், 1989 – ஆம் ஆண்டு  தேர்தல் பிரச்சாரத்துக்கு குமரி முத்துவின் பெயரை அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அன்று கழக மேடைகளில் ஏரி முழங்கத் தொடங்கிய குமரிமுத்து அவர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாடு முழுவதும் கழக் கூட்டங்களில் கொள்கை உரையாற்றியவர்.

“நடிகராக இருந்தாலும், மிக எளிமையாக, கழகத்தின் இதர பேச்சாளர்கள் போலவே தன்னை வெளிக்காட்டிக் கொண்டவர். சுயமரியாதை குணமும் திராவிட இயக்க வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பேசக்கூடிய சிறந்த உரையாளர். கிராமங்கள், நகரங்களின் இடுக்குகளில் எல்லாம் சென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்துக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர். அதனால்,  அவர் தனிப்பட்ட முறையில் பல திரைப்பட வாய்ப்புகளை இழத்திருக்கிறார்” எனக கூறுகிறார் தலைமைக் கழகப் பேச்சாளர் சாவல்பூண்டி சுந்தரேசன்.

 ஒரே கட்சி திமுகதான்
இடைப்பட்ட காலத்தில் நடிகர்கள் சிலர் கழகத்தில் இருந்து விலகியபோது,  பத்திரிகையாளர்களிடம் பேசிய குமரிமுத்து.

“எனக்கு எந்தப் பதவியும் கிடைக்காததால் கட்சியை விட்டு வெளியேறுவேன் என  புரளி கிளப்பிவிடப்படலாம். அனால் நான் எப்பேவும் ஒரே கட்சிதான். அதனால, எனனை பற்றி தப்பான தகவல் எதுவும் போட்டுடாதீங்க. நான் எதையும் எதிர்பார்த்து கட்சியில் இல்லை. என் இறுதிக் காலம் வரை, உதய சூரியனுக்கு ஓட்டு கேட்பேன். கழக மேடைகளில் என் முழக்கம் ஒலிக்கும். கழக மேடைகளில் என் முழக்கம் ஒலிக்கும். தலைவரும் தளபதியும் கூடத் தடுக்க முடியாது. ஏனென்றால் நான் கழகத் தொண்டன்” என உறுதியோடு அறிவித்தவர். அப்படி, எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கழகத் தொண்டனாகத் திகழ்ந்த அவருக்கு, 2014 – ஆம் ஆண்டில் கழகத்தின் முப்பெரும் விருதுகளில், தனது பெயரிலான விருதினை வழங்கி சிறப்பு செய்ததுடன், கலையுலக உடன் பிறப்பு! என அவருக்கு அடையாளம் சூட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

”75 வயதில் கலைஞர் பெயரில் விருது என்றபோது சிறுவனைப்போல துள்ளிக் குதித்தேன். கலைஞரின் இலக்கியத்தில், தமிழில், அரசியலில் மயங்கியவன் நான் அவர் பெயரில் விருது கினடத்ததை பிறவிப்பயனாக கருதுகிறேன்” என அந்த மேடையில் உவகையோடு யற்றினார் இந்தக் கலையுலக உடன்பிறப்பு.

அவரது கொள்கைப் பற்றுக்கு ”பெரியார் விருது” வழங்கி பெருமை சேர்த்தது திராவிடர் கழகம். அதே காலகட்டத்தில் கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவராகவும் தனது கடமையாற்றி வந்தார்.

கலையுலக கொள்கை முழக்கம்
கழகப் பணிகளுடன், நடிகர் சங்கத்தின செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும் என சட்டப் போராட்டத்தை நடத்தியவர் எதிர்பாராத வகையில் 2016 பிப்ரவரி 29 அன்று தனது 76-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  கலைஞரின் இரங்கல் உரை குமரிமுத்து அவர்களின் புகழைப் பாடியது. கலையுலகில் கழகத்தின் கொள்கை முழக்கம் தன் வாழ்நாளின் இறுதி வரை உறுதிமிக்க தி.மு.க.காரராக வாழ்த்தவர்“ என இரங்கலில் குறிப்பிட்டார் கலைஞர்.

குமரிமுத்து அவர்களின் நினைவினைப் போற்றிய இன்றைய கழகத் தலைவர் அவர்கள், ‘கலைஞரின் தொண்டராக கழகத்தின் பிரச்சார ஆயுதமாக மேடைதோறும் முழங்கியவர். அவரது சிரிப்பும் சித்தனையும் நம கழகத்தின் பயணத்தில் என்றும் துணை நிற்கும்“ என போற்றி இருந்தார். அந்த சொற்களை கழகம் காப்பாற்றி வைக்கும்.

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர்!

 

MUST READ