2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உரிய இடங்களை, எடப்பாடி பழனிசாமி வழங்காவிட்டால், அதை எதிர்த்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் தான் அவருடைய செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அண்ணாமலைதான் தமிழ்நாடு பாஜகவின் முகம். 2019ஆம் ஆண்டில் 3.7 சதவீதம் ஆக இருந்த பாஜகவை 2024ல் 11.4 சதவீதமாக உயர்த்தியவர் அண்ணாமலை. பிராமணர்களின் வாக்கு 2014 தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், 2019ல் கமல்ஹாசனுக்கும் விழுந்தன. 2024ல் தான் பிராமணர்களின் வாக்குகள் மாற்றம் இன்றி பாஜகவுக்கு விழுந்தது. இந்த வாக்குகள் அண்ணாமலையின் மாற்றத்தை சொல்லி வந்ததாகும். அண்ணாமலைக்கு வந்த வாக்கு மாற்றத்திற்காக வந்த வாக்குகளாகும். அதிமுகவை ஊழலை சொல்லியும், எடப்பாடியை விமர்சித்து பெற்ற வாக்குகளாகும். அண்ணாமலை தன்னுடைய தலைமை பண்பையும், வாக்கு வங்கியையும் தக்க வைக்க வேண்டும் என்றால்? அதிமுக குறைந்த சீட்களை பாஜகவுக்கு கொடுத்தால் அதை எதிர்த்து எடியூரப்பா, கல்யாண் சிங் போன்று வெளியே சென்றால் தான் வாய்ப்பு இருக்கும்.
விஜயை வைத்து அண்ணாமலையின் செல்வாக்கை காலி செய்யலாம் என்று தான் அண்ணாமலையை எதிர்க்கும் பாஜகவினரும், எடப்பாடி பழனிசாமியும் முயற்சி செய்கிறார்கள். நாம் அண்ணாமலையை எரிச்சரித்துவிட்டோம். இனி சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டியது அண்ணாமலைதான். எடப்பாடி பழனிசாமி விஜயை முக்கியத்துவம் கொடுப்பதில் அண்ணாமலைக்கு எதிரான ஒரு சதித் திட்டமும் உள்ளது. 18 சதவீதம் பலம் நிரூபித்த அண்ணாமலை ஒரு போட்டியாளராக வந்துவிடுவார் என்கிற அச்சம் சில பாஜகவினருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் மாட்டிக்கொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின், எம்ஜிஆரை போல எதிரிகளையும் அரவணைத்து அரசியல் செய்கிறார். ஓபிஎஸ்,டிடிவி போன்றவர்களை ஸ்டாலின் அரவணைக்கிறார். முக்குலத்தோர் சமுதாயம், எடப்பாடிக்கு எதிராக தான் இருக்கிறது.
மருத்துவர் ராமதாஸ், புதுக்கட்சி தொடங்கியவர்கள் தன்னிடம் உடல்நலம் விசாரிக்கவில்லை என்று விஜயை விமர்சித்துள்ளார். இதன் மூலம் ராமதாஸ், விஜய்க்கு எதிராக காய்களை நகர்த்த தொடங்க விட்டார். ராமதாஸ், திமுகவுக்கு கூட்டணி கதவுகளை திறந்துவிட்டிருக்கிறார். தற்போது அன்புமணி, 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை முன்வைத்து சௌமியா அன்புமணியையோ, அல்லது அவரே எடப்பாடியில் நிற்போம் என்று ஒருங்கிணைத்து செல்வது தான் அன்புமணிக்கு நல்லது. ராமதாஸ், சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார். அன்புமணி, தன்னம்பிக்கையோடு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வைத்து காய் நகர்த்த வேண்டும். அப்போதுதான் அன்புமணிக்கு 2026 தேர்தல் சிறப்பாக எதிர்பார்த்தது போன்று இருக்கும். பாமக, தேமுதிக, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் திமுக கூட்டணி வாய்ப்பை எடுத்தார்கள் என்றால்? ஸ்டாலின் கொடுப்பது எல்லாம் எம்.பி., எம்எல்ஏ போஸ்ட்டுகள். எனவே அவர்கள் கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எடப்பாடியிடம் ஓட் டிரான்ஸ்பர் திறமை கிடையாது. எடப்பாடியிடம் வன்னியர் வாக்குகள் இருக்கும் நிலையில், 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை எதிர்க்கும் தேமுதிகவுக்கு எப்படி வாக்குகள் வரும். அப்போது எடப்பாடியை நம்பி எப்படி தேமுதிக வெற்றி பெறும். ஆனால் ஸ்டாலின் கொடுப்பது எல்லாம் எம்.பி., எம்எல்ஏ போஸ்ட்.
எடப்பாடி பழனிசாமி விஜயை மிகவும் அதிகமாக நம்புகிறார். அது எடப்பாடியின் களம் வருகிறபோது தான் தெரியும். விஜய்க்கு பிரச்சார பலம், ரசிகர்கள் பலம் இருக்கிறது. உங்களால் தனித்து போட்டியிட முடியாது என்பதால் தான் கூட்டணிக்கு வந்திருக்கிறீர்கள். வாக்கு சதவீதம் நிரூபித்த விஜயகாந்துக்கு, ஜெயலலிதா 40 இடங்களை வழங்கினார். பலம் நிரூபிக்காத உங்களுக்கு 15 முதல் 20 இடங்களுக்கு மேல் தர முடியாது என்று சொல்ல வேண்டும். ஒரு அடையாள அரசியலுக்காகவும், பிரச்சார வலிமைக்காவும் இதோடு நின்றுகொள்ளுங்கள் என்று கடைசியில் சொல்லலாம். அல்லது பாஜகவை, தவெகவை காண்பித்து மட்டம் தட்டலாம். தவெகவை, பாஜகவை காண்பித்து மட்டம் தட்டலாம். பந்து எடப்பாடியின் கோர்ட்டில் உள்ளது. அவரிடம் இருவரும் போன பிறகு அப்பத்தை பங்கிட்ட கணக்காக அவர்தான் முடிவு செய்வார்.
அண்ணாமலை எப்படி தனக்கு எதிராக புரட்சி செய்யலாம் காத்திருக்கிறாரோ, அதேபோல விஜயால் புரட்சி செய்ய முடியாது. அவர் திரும்பி போகலாம். எடப்பாடி விஜயை வைத்து அண்ணாமலையையும் அடிக்கிறார். பாஜகவுக்கான இடங்களையும் குறைக்கிறார். சில பத்திரிகையாளர்கள் ஆட்சி மாற்றம் உறுதி என்று சொல்கிறார்கள். எடப்பாடி தலைமையில் எந்த காலத்திலும் ஸ்டாலினை வீழ்த்த முடியாது. சீமானின் அரசியல் நகர்வுகள் எடப்பாடியை மேலும் பலவீனப்படுத்தும். ஈர்ப்பு சக்தியற்ற எடப்பாடி பழனிசாமிக்கு, என்டிஏ ஓட்டு டிரான்ஸ்பர் ஆகாது. அது சீமானுக்கே பெரிய அளவில் டிரான்ஸ்பர் ஆகும். சீமான் 17 சதவீதம் வாக்குகளை பெற்று, எடப்பாடி பழனிசாமியை மேலும் பலவீனப்படுத்துவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.