spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅண்ணாமலையின் சோலி முடிஞ்சது! துக்ளக் குருமூர்த்தியின் வன்மம்! உமாபதி நேர்காணல்!

அண்ணாமலையின் சோலி முடிஞ்சது! துக்ளக் குருமூர்த்தியின் வன்மம்! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

பாஜகவில் பிராமணர்களின் ஆதிக்கத்தை அண்ணாமலை ஒழித்துக்கட்டினார். தற்போது அவரிடம் பதவி இல்லாததால் நில விவகாரத்தில் அவரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அண்ணாமலைக்கு எதிரான நில விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அளித்த பேட்டியில், அண்ணாமலை மிகவும் வேகமாக செயல்பட்டதால் தான் அவருடைய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் இதே குருமூர்த்தி 5 வருடங்களுக்கு முன்னதாக அண்ணாமலையின் வேகம் தான் கட்சியை உயர்த்தியதாக பேசினார். பாஜகவில் இருந்த பிராமணர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான மோதலில் பிராமணர்களை அடியோடு ஒழித்துக்கட்டினார். பிராமணர்களை கட்சி அலுவலகத்திற்குள்ளே விடமால் ஓட ஓட விரட்டினார்.

நிர்மலா சீதாராமன், கோவை பக்கம் வரக்கூடாது என்று அவருடைய ஆசையை ஒழித்துக்கட்டினார். குருமூர்த்தி ரஜினிகாந்தை கட்சிக்கு அழைத்துவருவதாக மோடி – அமித்ஷாவிடம் சொல்லி ஏமாற்றிவிட்டார். இதனால் அவர் மீது மோடி – அமித்ஷாவுக்கு எந்த வித மரியாதையும் கிடையாது. குருமூர்த்தி பாஜக அலுவலகத்திற்குள் வரவிடாமல் அடித்து துரத்தியவர் அண்ணாமலை. எஸ்.வி.சேகர், குருமூர்த்தி, கே.டி.ராகவன் துபோன்றவர்களை ஒழித்துக்கட்டினார். இப்போது அவர்களுடை முறை வந்துள்ளது. அண்ணாமலை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் எல்லோரும் போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக வந்த உடன் மாமுல் கோடிகளில் கொட்டியது. அண்ணாமலை பொறுப்பில் இருக்கும் வரை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது பிராமணர்கள் கூட்டம் எல்லாம் சேர்ந்து அண்ணாமலையை ஒழிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு குருமூர்த்தி தான் தலைமை வகிக்கிறார். தற்போது அண்ணாமலை 85 கோடிக்கு நிலம் வாங்கியுள்ளார் என்கிற விவகாரத்தை வெளியிட்டிருக்கின்றனர். உலகத்திலேயே கவுன்சிலர் பதவிக்கு கூட வரமால் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்தவர் அண்ணாமலை மட்டும்தான். நில விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை, தான் சேமித்து வைத்த நிதியில் இருந்து தான் நிலத்தை வாங்கியதாக விளக்கம் அளித்துள்ளார்.

நான் நிலம் வாங்கி இருப்பது சில ஆர்வக் கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களை கடவுள் காப்பாற்றட்டும் என்றும் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால் அண்ணாமலையின் சென்னை வீட்டிற்கான வாடகையை, இன்னும் அவரது நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள். ஒரு ஏழை விவசாயியின் மகன் முன்னேறுகிறார் என்கிறபோது திமுக அரசு, அமைச்சரை கூப்பிட்டு பத்திரப்பதிவை ஃபிரீயாக செய்து  கொடுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அண்ணாமலை மீதுள்ள பழைய வெருப்பில் அப்படி செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியான நிலையில், அதற்கு நயினார் கடுமையாக விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அண்ணாமலை சொல்லிதான் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது உண்மையாக இருக்கவும் சாத்தியம் உள்ளது. காரணம் அண்ணாமலையை லாபி செய்து வளர்த்துவிட்டது அந்த பத்திரிகைதான்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நயினார் நாகேந்திரனை பதவியை விட்டு தூக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் திட்டமாகும். அதன்படி போய் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தல் பாஜகவுக்கானது அல்ல என்று குருமூர்த்தி சொல்லியுள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பது அவர்களுக்கே  தெரியும். பிறகு எப்படி வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள். மற்ற ஊர்களில் அரசியல் செய்யும் பாஜக தமிழ்நாட்டில் மண்ணை கவ்வுகிறார்களா? இல்லையா? என்று பாருங்கள். அதிமுக உடன் சேர்ந்து 4 இடங்களில் கூட அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

குருமூர்த்தியின் கருத்து மூலம் அதிமுக – பாஜக கூட்டணி மொத்தமாக மண்ணை கவ்வ போகிறது என்பது உறுதியாகிவிட்டது. எனவே இந்த முறை திமுக தான் ஆட்சிக்கு வரும். அடுத்த முறையிம் திமுக தான் ஆட்சிக்கு வரும். செங்கோட்டையன், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்களை சந்தித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இது மௌனம் காத்து வருகிறார். தங்கள் கட்சி விவகாரத்தில் எப்படி பாஜகவினர் தலையிடம் முடியும் என்று அவர் கேட்டால் டெல்லி திகார் ஜெயிலில் போட்டு விடுவார்கள். செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க முடியாது. ஏற்கனவே அவர் மீது கை வைத்ததால்தான் கரண்ட் ஷாக் அடித்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி, எழுச்சி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து சொல்ல மறுக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ