spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநம்ப வைத்து ஏமாற்றிய பாஜக! கடும் மனஉளைச்சலில் ஆர்.என்.ரவி! "ஸ்டாலின் வேற விடாம அடிக்கிறார்!

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக! கடும் மனஉளைச்சலில் ஆர்.என்.ரவி! “ஸ்டாலின் வேற விடாம அடிக்கிறார்!

-

- Advertisement -

ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அது அவருக்கு கிடைக்கவில்லை. எனவே ஏதேனும் பதவி கிடைக்கும் என்பதால் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிந்துரைகளை நிராகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதா குறித்த ஆளுநரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். பொதுவாக ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த மரபுகளையும் மதிப்பது இல்லை. அரசியல் சட்டத்தையும் மதிப்பது கிடையாது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் என்பது திமுக ஆட்சிக்கு வந்தபோது தொடங்கியது.

we-r-hiring

துணை வேந்தர் என்று வருகிறபோது, அவரை நியமிக்கும் உரிமை என்பது தான் முக்கியமானது. துணை வேந்தர் நியமனத்திற்கு ஏன் தாமதம் செய்கிறார் என்றால், அவர்களை நியமிக்கும் உரிமை அவரிடம் இல்லை என்பதுதான் அர்த்தமாகும். திமுக அரசுக்கு இவ்வளவு பெரிய பெரும்பான்மை இருந்தும் 4 வருஷமாக சித்த மருத்துவ மசோதாவை நம்மால் நடைமுறைக்கு கொண்டுவர முடியவில்லை. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் கொண்டுவரும் மசோதாவால் டெல்டா மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால் அதை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது அது நீதிமன்ற விவகாரம் ஆகிவிட்டது. தமிழக அரசின் தீர்மானம் நமக்கு அதிகபட்சமாக மாநில சுயாட்சிக்கான தேவையை உணர்த்துகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார். ஆர்.என். ரவி, எஜமான விசுவாசத்தோடு செயல்படுகிறார். உண்மையில் ஆர்.என்.ரவி எதிர்பார்த்தது குடியரசுத் துணைத் தலைவர் பதவி. ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. இருந்த போதும் எதாவது ஒன்று கிடைக்கும் என்று ஓடுகிறார். யார் நியமிக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்வது தான் ஆளுநர் பதவிக்கான வரையறையாக மாறிவிட்டது. சிக்கல் என்பது ஆளுநர் பதவி தேவையா? தேவை இல்லையா? என்பதுதான். காரணம் அது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து வந்தது.

எப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வந்ததோ, அதற்கு பிறகு மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அவைக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய குறைந்தபட்சம் தேர்தல் நடைபெறுகிறது. ஆளுநர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் இன்றைய தேதிக்கு மோடி – அமித்ஷாவுக்கு நெருங்கியவராக இருந்தால் போதும்.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

அரசியல் ரீதியாக யாரெல்லாம் அரசுக்கு எதிராக இருக்கிறார்களோ. அவர்களுக்கான  அடைக்கல பூமி ராஜ்பவனாகும். ஆனால் அது நமது செலவில் நடைபெறுகிறது. அப்போது இந்த ஆளுநருக்கு எதிராக எவ்வளவு தீர்மானம் நிறைவேற்றினாலும் பயன் இல்லை என்று ஆகிறது. சட்டமன்ற தீர்மானம் மூலம் அரசு எதை சாதிக்கப் போகிறது. மீண்டும் ஒரு முறை மாநில சுயாட்சி, சட்டமன்றத்தின் மேலாண்மை, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து விவாதத்தை கிளப்பும். அதை தாண்டி என்ன பயன் உள்ளது? ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு எதிராக அரசியல் செய்வது தெளிவாக தெரிகிறது.

இப்படியான ஒரு ஆளுநரை வைத்து இங்கே குப்பை கொட்ட முடியாது. உச்ச நீதிமன்றம் குட்டு கொடுத்தாலும் ஆளுநர் யாரையாவது வழக்கு தொடர வைத்து, இங்குள்ள நீதிபதிகள் மூலம் உத்தரவுகள் வாங்க பார்க்கிறார்கள்.  ஆர்.என்.ரவி, உண்மையிலேயே இந்த மாநிலத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவர். அப்படியான ஒரு கருத்து இருந்ததால் தான் நாகாலாந்தில் இருந்து அவரை விட்டி அடித்தார்கள். ஆனால் இங்கே பாஜக அரசு, தனது உள்நோக்கங்களுக்காக ஆர்.என்.ரவியை வைத்துக்கொண்டே இருக்கிறது.

ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், தீர்மானத்தின் மீது அதிமுக ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. அதேபோல் பாஜகவும் கருத்து கூறவில்லை. அப்படி கருத்து கூறினால், தங்களுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என நினைக்கிறார்கள். இப்படியான பரிதாபமான நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி இருப்பதால் திமுகவுக்கு நன்மை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை உள்ளே நுழைந்து அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொள்கிறது. அப்போது உச்சநீதிமன்றம் கூட்டாட்சி தத்துவம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்புகிறது. மாநில அரசின் துறைகளில் அமலாக்கத்துறை எப்போது வேண்டுமென்றாலும் புகுந்து ஆவணங்களை அள்ளிக்கொண்டு செல்வார்கள் என்றால் அரசை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்புகிறது. ஆனால் அதற்கெல்லாம் இவர்கள் வெட்கி தலைகுனிந்து விட்டார்களா? உச்சநீதிமன்றம் எவ்வளவு குட்டினாலும் இவர்கள் தலைகுனிவது இல்லையே. இப்படியான வெட்கம் கெட்ட அரசியல்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ