Homeசெய்திகள்கட்டுரைசாதிவாரி கணக்கடுப்பு! பாஜகவ நீங்க புரிஞ்சுக்கவே இல்ல! ராகுல் எழுப்பிய சுளீர் கேள்வி!

சாதிவாரி கணக்கடுப்பு! பாஜகவ நீங்க புரிஞ்சுக்கவே இல்ல! ராகுல் எழுப்பிய சுளீர் கேள்வி!

-

- Advertisement -

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாஜக மீதான மதிப்பு சரிந்துள்ளது. மேலும் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அவற்றை மறைக்கும் விதமாக மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.

genram
genram

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த மத்திய அரசின் அறிவிப்பும், அதன் பின்னணி குறித்தும் பத்திரிகையாளர் ஜென்ராம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அவசரமாக கூடுகிறது என்றால் பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான விகாரங்களை சமாளிப்பது தொடர்பான முக்கியமான அறிவிப்புகளோடு வரப் போகிறார் என காத்திருந்தோம். ஆனால் அந்த மாதிரி எதுவும் வரவில்லை. 2024 தேர்தலின்போது நாட்டை சாதிவாரிய பிரிக்க பார்க்கிறார்கள் என்று காங்கிரசை இவர்கள் திட்டாத திட்டே இல்லை. 2010ஆம் ஆண்டிலேயே இந்த கோரிக்கைகளை திமுக, சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சமூக, பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், அவற்றுக்கு போதிய தரவுகள் இல்லாததால் வெளியிடவில்லை.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, வளர்ச்சிக்கான புதிய பாதையை இந்த கணக்கெடுப்பு திறந்துவிடும் என்று சொல்கிறார். ராஜஸ்தான் முதலமைச்சர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொலைநோக்கு பார்வை கொண்டது என்று சொல்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாறியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதனை அடிப்படையாக வைத்து வேறு சில விஷயங்களும் நடைபெற வேண்டி உள்ளது. குறிப்பாக பெண்களுக்கான இடஒதுக்கீடு இதற்கு பிறகுதான் செய்ய வேண்டும்.  தொகுதி மறுவரையறை செய்ய வேண்டி உள்ளது. மு.க.ஸ்டாலின் கற்பனையாக சொல்வதாக சொன்னார்கள். அவர்களை நினைத்தால் பாவமாகத்தான் உள்ளது. அவர் சொன்னது, தற்போது வந்துவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்துவிட்டால், நீங்கள் அடுத்தபடியாக தொகுதி மறுசீரமைப்பு செய்தாக வேண்டும். கொரோனா காரணமாக 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. அதைதான் தற்போது எடுக்கப்போகிறீர்கள். 2021ஆம் ஆண்டு எடுப்பதற்கு பதிலாக 2026ஆம் ஆண்டு எடுக்கப்போகிறீர்கள்.  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இதற்கான காலக்கெடு மற்றும் நிதி ஒதுக்கீடு விவரங்களை சொல்லுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அவர்கள் வரலாற்றுப்பூர்வமான முடிவுகளை எடுத்தாலும் கூட அவர்களது கடந்த கால நடவடிக்கைகள் அவர்கள் மீது எவ்வளவு சந்தேகத்தை எழுப்புகிறது.

ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் ஏழைமக்களிடம் திருடுவதாக - ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் முன்வைத்த சாதிவாரி கணக்கெடுப்பும், தற்போது மத்திய  அரசு அறிவித்துள்ள கணக்கெடுப்பும் ஒன்றா என்று கேள்வி எழுகிறது. அதைதான் ராகுல்காந்தி, எப்படி செய்யப் போகிறீர்கள், அதற்கான கால நிர்ணயம் என்ன? நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், பீகார் தேர்தலுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி  எழுப்பினார்கள்.  அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பகல்ஹாம் தாக்குதல்களுக்கு பிறகு, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தோ, உளவுத்துறையின் தோல்வி குறித்தோ எந்த வார்த்தையும் ராகுல்காந்தி சொல்லவில்லை. அரசு எடுக்கும் நவடடிக்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார். அரசு என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கும் அதிகாரத்தை முப்படை தளபதிகளிடம் வழங்கிவிட்டதாக சொல்கிறத. போருக்கான அதிகாரத்தை அவர்களே எடுக்க முடியுமா? புதிய துல்லிய தாக்குதல்கள் எதுவும் இல்லை. அப்படி எதுவும் நடந்தால் அது எங்கள் உத்தரவுப்படி நடக்கவில்லை என்று சொல்வார்களா? 2019ல் மன்மோகன் இதுபோன்று ஆயிரம் முறை நாங்கள் தாக்கியுள்ளோம். அதை ஏன் வெளியே சொல்கிறீர்கள் என்று சொன்னார். அதை புரிந்துகொண்டார்களா?

மோடி - அமித்ஷா

பஹல்காம் தாக்குதல் பாஜகவுக்கு எந்த விதத்திலும் ஆதாயத்தை பெற்றுத்தரவில்லை. மாறாக குடிமக்களை காக்க தவறிவிட்டது என்கிற கெட்ட பெயரைத்தான் எடுத்து தந்துள்ளது என்று நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது இந்த நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் பார்க்கப்படுகிறது. பஹல்காமுக்கே செல்லாமல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, பீகாரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததை நாம் பார்த்தோம். அப்போது இந்த அறிவிப்பு என்பது பீகார் தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றுதான் மக்கள் நினைப்பார்கள். தமிழ்நாட்டை அடியொற்றி கடந்த காலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நீதிக்கு குரல் எழுப்பிய மாநிலம் பீகார். சோசலிச பின்னணியில் வந்தவர்கள் தான் லாலுபிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் பாஜக என்று பிரச்சாரம் செல்கிறபோது, பீகாரில் தேர்தல் கடினமாகும் என்பதால் முடிவு செய்து இதனை செய்திருக்கலாம்.

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் என்ன என்ன விவரங்கள் வெளி வரும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதெல்லாம் வெளி வருமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் சிலர் பாஜக இந்த விவரங்களை வெளியிடும் என்று எதிர்பார்ப்பதே தவறு. மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கையை கொடுக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அறிவிப்பை வரவேற்பதன் வாயிலாக அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை மக்களிடம் கொடுக்கிறீர்கள். அது சரியில்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்லவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். காலக்கெடுவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுப்பதுதான் சரியானது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ