Homeசெய்திகள்கட்டுரைவிஜயின் பொதுக்குழுவில் உறுதியானது திமுக வெற்றி! பேராசிரியர்  சுப.வீரபாண்டியன் விளாசல்!

விஜயின் பொதுக்குழுவில் உறுதியானது திமுக வெற்றி! பேராசிரியர்  சுப.வீரபாண்டியன் விளாசல்!

-

- Advertisement -

அதிமுக, பாஜக, தவெக என அனைத்துக்கட்சிகளும் திமுகவை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உண்மையான வலிமையான கட்சி திமுக தான் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - சுப.வீரபாண்டியன்

சென்னை திருவான்மியூரில் நடந்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவருடைய விமர்ச்னங்களுக்கு பதில் அளித்து திராவிடர் தமிழர் இயக்க பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- தவெக பொதுக்குழுவில் உரையாற்றியுள்ள விஜய் சில செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் பேசிய விஜய் முழுக்க முழுக்க திமுகவையே தன் குறியாக வைத்து தாக்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் கலவரங்கள் நடப்பது போலவும், இவர் ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் ஆன உடன்தான் எல்லாம் அடங்கும் என்பதை போன்றும் பேசியுள்ளார்.  திமுகவை மட்டும் பேசினால் தான் அம்பலப்பட்டு போய் விடுவேன் என்பதால், பாஜகவை தாக்க தொடங்குகிறார். அப்படி தொடங்கும்போது இங்கே இப்படி என்றால், அங்கே இவர்களின் சீக்ரெட் ஓனர் என்கிறார். யார்? யாருக்கு? சீக்ரெட் ஓனர் என்பது மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்த சீக்ரெட். அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. எல்லோருக்கும் தெரியும். யார் யாரை?, யார் யார்? எதற்காக பயன்படுத்துகிறார்கள்? என்பதை நாடு அறியும்.

எனவே தனக்கு சீக்ரெட் ஓனர் அவர் என்பது வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக திமுகவின் ரகசிய முதலாளிகள் என்று விஜய் பேசுகிறார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியாக வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே இரண்டு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி. திமுக, தவெக என்று அவர் சொல்கிறார். திமுக எங்கே இருக்கிறது. தவெக எங்கே இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்ன என்றால்? எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்கிறார் விஜய். எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவை அழிப்பதுதான் எங்கள் நோக்கம் என்பது பாஜக. இதனை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிற இன்னொரு கட்சியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே இந்த 4 கட்சிகளுக்கும் திமுகதான் எதிரி என்றால், தமிழ்நாட்டில் உண்மையான வலிமையான கட்சி திமுக தான் என்பதை இவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருளாகும். அதுமட்டுமின்றி விஜய் பேசுகிற போது பிரதமர் மோடிக்கு ஒரு செய்தியை சொல்லுகிறாராம். “கவனமாக இருங்க பிரதமர் மோடி சார்… தமிழ்நாட்டை கொஞ்சம் ஜாக்கிரதையாக ஹேண்டில் பண்ண வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு ஆளான ஆளுக்கெல்லாம் தண்ணீர் காட்டிய மாநிலம்”.

யார் தண்ணீர் காட்டினார்கள்? யார் அனைத்து போராட்டங்களையும் இதுவரையில் நடத்தினார்கள்? தவெக இதுவரை போராட்டங்கள் நடத்தியுள்ளதா? தவெகவுக்கு எதாவது வரலாறு உண்டா? வேண்டுமென்றால் நாங்கள் எதிர்காலத்தில் அப்படி செய்வோம், இப்படி செய்வோம் என்று சொல்லலாம். எந்த ஒன்றையும் பின்னால் திரும்பி இவற்றை நாங்கள் செய்தோம் என்று அவர்களால் சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போது தான் தொடங்கி இருக்கிற புதிய கட்சி ஆகும். இதற்கு முன்னால் தமிழ்நாடு உங்களை தண்ணீர் காட்டி இருக்கிறது என்றால்?  அப்படி யார் அங்கே இருந்தாலும், அவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி டெல்லியையே அச்சுறுத்திய கட்சி தமிழ்நாட்டில் எது? எனவே விஜய் தன்னை அறியாமல் ஒரு உண்மையை ஒத்துக்கொள்கிறார். காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் எல்லாம் தேசிய கட்சிகளாகும். தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கிற கட்சிகளில் திமுக தான் 75 ஆண்டுகளை கடந்த பெரிய கட்சியாகும்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

திமுகவின் காலத்தில் தோன்றிய கட்சிகள் இன்றைக்கு இல்லை. ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சி, மாபொசி தொடங்கிய தமிழரசு கட்சி, சி.ப.ஆதித்தனார் தொடங்கிய கட்சி, இ.வி.கே. சம்பத் தொடங்கிய தமிழ்தேசிய கட்சி, எம். கல்யாணசுந்தரனார் தொடங்கிய யுசிபிஐ கட்சிகள் இன்றைக்கு இல்லை. இவைகள் இருந்தன. ஆனால் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்றால்? அது ஒரே ஒரு கட்சி திமுக தான். அப்படியானால் கடந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்தது யார்? என்று விஜய் தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். திமுகவின் வெற்றியை விஜய் இந்த பொதுக்குழுவில் உறுதி செய்துள்ளார். இவர்கள் எல்லோரும் தங்களுக்கு ஒரே எதிரி திமுக என்று சொல்கிறார்கள். நீங்கள் எல்லோரும் ஒன்றாக நில்லுங்கள் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் தனித்து நின்றாலும், ஒன்றாக நின்றாலும் இறுதி முடிவு ஒன்றுதான்.2026 தேர்தலில் 234க்கு, 200 தொகுதிகள் என்பது திமுகவின் இலக்கு. திமுக அதை அடைந்தே தீரும்.

eps

எடப்பாடியார் டெல்லிக்கு தங்கள் கட்சி அலுவலகத்தை பார்க்க போனேன் என்று சொல்கிறார். அலுவலகத்தை பார்க்க போகிறபோது அப்படியே தேனீர் கடைக்கு போனால் அங்கே அமித்ஷா நின்று கொண்டிருந்தார் என்று சொல்லவில்லையே தவிர, அது ஒரு தற்செயலான சந்திப்பாம்! எனவே இவர்கள் எல்லாம் எதை நோக்கி நகர்கிறார்கள். யாரை எதிர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள் என்று நமக்கு புரிகிறது. எல்லோராலும் எதிர்க்கப்படும் திராவிட பெரும் சுவராக திமுக நின்று கொண்டிருக்கிறது.

இன்றைக்கு பேசிய விஜய் வக்பு வாரியம் குறித்து என்ன பேசுகிறார். மகா கும்பமேளாவை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் நடைபெறுகிற கலவரம் குறித்து என்ன பேசினார்? என்றெல்லாம் அவர்கள் கட்சிக்கார்களே தெரிந்துகொள்ள முடியாது. டென்னிசன் எழுதிய புகழ்பெற்ற வரிகளை, வேறு யாரோ எழுதியாக விஜய் சொல்கிறார். நமக்கு அதுவெல்லாம் பெரிய செய்தி அல்ல. திமுகவை எதிர்ப்பதுதான். அதன் மூலம் என்ன வெளிப்படுகிறது உங்களுடைய நோக்கம் பாஜகவை எதிர்ப்பது அல்ல. வருகிற தேர்தலில் பாஜகவா?, நாங்களா? என்று பார்த்துவிடுகிறோம். அதிமுகவா? நாங்களா? என்று பார்த்துவிடுகிறோம் என்று அவர்களே சொல்லவில்லை. திமுகவா? நாங்களா? என்று பார்த்துவிடுகிறோம் என்று விஜய் சொல்கிறார். மலையில் மோதுவது உங்கள் விருப்பமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ