spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅமித்ஷாவுக்கே அல்வா! கருப்பு பண விவகாரம்! புதிய சிக்கலில் அண்ணாமலை!

அமித்ஷாவுக்கே அல்வா! கருப்பு பண விவகாரம்! புதிய சிக்கலில் அண்ணாமலை!

-

- Advertisement -

செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்து பேசியதற்கான எதிர்வினையை தொகுதி பங்கீட்டிற்காக அவர் சென்னை வரும்போது எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அண்ணாமலை மற்றும் பாஜகவினர் இடையிலான மோதல் குறித்தும், அதிமுகவில் தீவிரமடைந்து வரும் உட்கட்சி பூசல்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-அண்ணாமலை, நாங்கள் தான் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி. அதிமுகவை விட அதிக இடங்களில் வருவோம் என்று 2024ல் போய் பாஜக தலைமையிடம் சொன்னார். ஆனால் அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தங்களால் முடிந்தவரை தங்கள் பகுதிகளில் கட்சியை வளர்த்துள்ளனர். குறிப்பாக எல். முருகன் காலத்தில் பாஜக அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். ஆனால் அவர் தோற்று போனார். இதுதான் பாஜகவினுடைய வளர்ச்சி ஆகும்.

இது கடைசியாக 4 சட்டமன்ற உறுப்பினர்களில் வந்து நிற்கிறது. ஆனால் அண்ணாமலை 2026ல் பாஜக தான் ஆட்சி அமைக்கும். நாங்கள் தான் முதலமைச்சர் என்று சொன்னார். தற்போது பாஜக மேலிடம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். இது அண்ணாமலை விருப்பம் அல்ல. அவர் நாங்கள் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெல்வோம் என்கிற நம்பிக்கையை கொடுத்து, மத்திய அரசின் சக்தியை பெற்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் தோல்வியை தான் காட்டின. அண்ணாமலை இன்னும் அதிகாரியாகவே இருக்கிறார்.

annamalai modi

என்.டி.ஏ கூட்டணிக்கு உள்ளே, அண்ணாமலை விஷமத்தனமான பிரச்சாரங்களை, வியூகங்களை ஆபரேட் செய்கிறார் என்கிற தகவல் ரொம்ப நாட்களாக போய்க் கொண்டிருக்கிறது. இந்தியா டுடே கான்கிளேவில் பேசிய அண்ணாமலை இன்றைய தேதியில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் பாஜகவின் மாநில தலைவராக இருந்தால் அவருக்கு எல்லாம் சரியாக தெரிந்திருக்கலாம். எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகந்திரன் வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே நமக்கு இந்த நிலைமை உள்ளது. அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் என்ன ஆவது என்று யோசிக்கிறார்.

தற்போது அண்ணாமலை கோவையில் நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. அதற்கு அண்ணாமலையே முன்வந்து விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலைக்கு எதிராக அவருடைய கட்சியினரே தகவல்களை கசியவிட்டிருக்கிறார்கள். அவர் மக்கள் பிரதிநிதியாக இருந்து சொத்துக்களை சேர்க்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் சேர்த்த சொத்துக்கள் சேர்த்துள்ளது குறித்து அலசி ஆராய தேவையில்லை. இந்தியா டுடே கான்கிளேவில் பேச 45 நிமிடங்கள் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் திமுக குறித்த கூர்மையான விமர்சனங்களை அண்ணாமலை வைத்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. எனவே அண்ணாமலை திட்டம் போட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைய கால கட்டத்தில் அதிமுகவை எல்லோரும் சுத்தி அடிக்கிறார்கள். அதில் பாஜகவும் ஒரு ரோல் பிளே செய்கிறது. செங்கோட்டையன் ராமரை பார்க்க போவதாக சொல்லிவிட்டு சென்று அமித்ஷாவை பார்க்கிறார். அதிமுகவில் பிரச்சினை என்றால், பாஜகவிடம் போய் பேசி என்ன செய்வது? இதை பேசினார் என்பதற்காக ஒருவருக்கு மாநில பொறுப்பு போனது. இதை நீங்கள் முடிவு செய்கிறீர்கள் என்று தெரிந்து கெடு வைத்த உடன், மாவட்ட செயலாளர் பதவி போய்விட்டது. இதையும் மீறி போகிறீர்கள் என்றால்? தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சீட்டு தராவிட்டால் அமித்ஷாவிடம் சென்று முறையிடுவாரா? அப்போது அமித்ஷா தேர்தலுக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார். இது தெரியாமல் ஒருவர் பின்னால் ஒருவர் டெல்லியிடம் போய் நம்பி நம்பி ஏமாறுகிறார்கள்.

அண்ணாமலை சொல்வது அரசியல் விளையாட்டுக்கள் டிசம்பர் மாதத்தில் தெரியும். சமீப நாட்களாக தினசரி ஊடகங்களை பார்க்கிறபோது முதலமைச்சர் எடப்பாடியா? அல்லது ஸ்டாலினா? என்பதே மறந்துவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர் பாட்டிற்கு ஃபிரியாக இருக்கிறார். ஆனால் அதிமுகவுக்குள் அவர்களுக்குள்ளாக கபடி விளையாடி கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் உறுதியாக அமர்ந்துவிட்டார். மறுபுறம் தோற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த பதவியை கொடுத்துவிடு என்கிறார்கள். தோற்றவர்கள் கேட்கிறபோது,  ஜெயித்தவர் எப்படி விட்டுத்தருவார்?

அதிமுகவுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை வந்துள்ளதோ, அப்போது தொண்டர்கள் அந்த கட்சியை விட்டது கிடையாது.  தொண்டர்கள் ஒன்று சேர்ந்து இவர்தான் ஆளுமை, இவர் தான் முதலமைச்சர் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றால் அவரை கொண்டு வந்து பதவியில் அமர்த்தி விடுவார்கள்.  அப்படிதான் எம்ஜிஆரை, ஜெயலலிதாவை பதவியில் உட்கார வைத்தார்கள். அதிமுகவுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் புதிது கிடையாது. எம்ஜிஆர் மறைவின்போதும், ஜெலலிதா மறைவின்போதும் பிரச்சினை வந்தது. அப்போது எல்லாம் தொண்டர்கள் தங்களுக்கு பிடித்தமான தலைவரை தேர்வு செய்து தலைமைக்கு கொண்டு வந்தார்கள்.  தற்போது அதுபோன்ற நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே நினைக்கிறேன். காரணம் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றம், அமித்ஷாவை பார்க்காமல் நேரடியாக மக்களை போய் சந்தித்து கொண்டிருக்கிறார்.

எழுச்சி பயணம் என்கிற பெயரில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொண்டர்களை நேரடியாக சந்தித்து உற்சாகப்படுத்துகிறார். அந்த தொண்டர்கள் தங்களுக்கான தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றால்? பிரச்சினை தீர்ந்துவிடும் அல்லவா?. டெல்லிக்கு சென்ற செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி இதற்கான பதிலை, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா வரும்போது பேசுவார். ஒரு காலத்தில் பாஜகவுக்கு 70 சீட்டுகள் குறையாது. 50 சீட்டுகள் வாங்குவோம் என்று சொன்னார்ரகள். ஆனால் 20  சீட்டுகள் தான் கொடுத்தார். பாமகவை விட குறைவான இடங்களை தான் பாஜகவுக்கு வழங்கினார். பாஜகவின் வாக்கு சதவீதம் 5-6 சதவீதமாகும். அப்போது அதைவிட குறைந்த கட்சியாகவே இதை எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ