spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேர்தலில் எப்படி எல்லாம் மோசடி நடக்கிறது? EVM மீது சந்தேகம் ஏற்பட காரணம்? அய்யநாதன் நேர்காணல்!

தேர்தலில் எப்படி எல்லாம் மோசடி நடக்கிறது? EVM மீது சந்தேகம் ஏற்பட காரணம்? அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன்.பி. லோகுர் தலைமையிலான அமைப்பு  உலகப்புகழ்பெற்ற 20 மின்னணு பொறியாளர்கள் வைத்து நடத்திய ஆய்வில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் தேர்தல் நம்ப தகுந்தது அல்ல என்று அறிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ராகுல்காந்தி எழுப்பியுள்ள வாக்கு திருட்டு விவகாரம் குறித்தும், தேர்தல் ஆணையம் – பாஜகவின் விதிமீறல்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில் கூறியிருப்பதாவது :- இந்தியா போன்ற நாட்டில் வாக்குப்பதிவில் மோசடி நடைபெறுகிறது என்றால் பெரிய திட்டம் தீட்டப்பட்டிருக்கும். அதை செயல்படுத்தும்போது எங்காவது ஓரிடத்தில் கசியவே செய்யும். கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர் என்பவர் போட்டியிட்ட தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நிறுத்தி வைத்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தையும், விவிபேட் இயந்திரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளைவிட விவிபேடில் 200 வாக்குகள் கூடுதலாக இருந்தன. அப்போது விவிபேடில் உள்ள வாக்குகளை வைத்து முடிவுகளை அறிவிக்கும்படி சொன்னார்கள். ஆனால் 200 வாக்குகள் எப்படி கூடுதலாக வந்தன என்று விளக்கம் அளிக்கப்பட வில்லை.

எலெக்ட்ரானிக்ஸ்-ஐ பொருத்தவரை மார்ஜின் ஆப் எரர் என்பது அதில் கிடையாது. அதில் அக்யூரசிதான். நான் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்து புத்தகம் எழுதியபோது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வந்தன. அப்படி என்னுடைய புத்தகம் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு இருந்ததா? என்று நான் கேட்டேன்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…

டேவிட் டில் என்கிற அமெரிக்கர், தேர்தல் நடவடிக்கைகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைக்கக்கூடாது என்று அவர் போராடி வெற்றி பெற்றார். அதன் காரணமாகவே அமெரிக்காவில் பல மாகாணங்களில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுகிறது. அவர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, மோசடி செய்யும் வாய்ப்புகள் அதிகமுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது ஏன் என்று கடிதம் அனுப்பினார். ஆனால், தேர்தல் ஆணையம் அதற்கு பதில் சொல்லவில்லை. தேர்லுக்கான குடிமக்கள் ஆணையம் என்கிற அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன்.பி. லோகுர் உள்ளார். துணை தலைவராக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய தலைவராக இருந்து ஓய்வுபெற்ற ஹபிபுல்லா. அவர்களின் கீழ் உலகப்புகழ்பெற்ற 20 மின்னணு பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஆய்வுசெய்து, இது நம்ப தகுந்த தேர்தல் முறையே அல்ல என்று அறிவித்து விட்டார்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது என்பது எப்படி தன்னிச்சையாக நடைபெறும். தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்துதான் அப்படி சேர்த்துள்ளனர். ராகுல்காந்தி, மகாதேவபுரா தொகுதியில் வாக்குப்பதிவு விவரங்களை 40 பேரை வைத்து ஆய்வு செய்து, குறைபாடுகள் இருப்பதாக சொல்கிறார். தேர்தல் ஆணையர் 10 நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது ராகுல்காந்தி வெளியிட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்துடையதுதான். அவர் முன்வைத்துள்ள முறைகேடு புகார் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ராகுல்காந்தி ஒரு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு தப்பியோடினார். வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சம் பேர் போலியாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று ராகுல் சொல்வது ஆதாரம் இல்லாமல் வேறு என்ன? 40 ஆயிரம் பேருக்கு அப்பா பெயர் இல்லை. வீட்டின் கதவு எண் இல்லை. அது ஆதாரமில்லாமல் வேறு என்ன?

11 ஆயிரம் பேருக்கு ஒரே தொகுதியில் 2 முறை என்ட்ரி ஆகியுள்ளது. அது ஆதாரம் இல்லாமல் என்ன? பிளாட்பார்மில் இருப்பவர்கள், பாலத்திற்கு கீழே தூங்குபவர்கள், ரயில்வே நிலையத்தில் இருப்பவர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலில் சேர்த்த யார்?  வீட்டு எண் இல்லாமல் ஒரு வாக்காளரை சேர்த்ததை பீகாரில் ஒத்துக்கொண்டுவிட்டீர்களா? கதவு எண், அப்பா பெயர் இல்லை என்றால்? பிறந்த ஆதாரத்தை எப்படி கொண்டு வருவார்கள். 11 ஆவணங்களை கேட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம், மகாதேவபுரா தொகுதிக்கு வரும்போது ஏழை எளிய மக்கள் என்று பதுங்குகிறார்கள். அப்போது பீகாரில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மிட்டா மிராசுகளா?

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு

வாக்காளர்களின் தந்தை பெயருக்கு ஏ,பி,சி,டி என்று பெயர் போட்டிருக்கிறார்கள். அதற்கான வழிகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலேயே உள்ளன. National Voters Service Portel என்கிற இணையதளத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவதாக இருந்தால் நாமே அதை மாற்றிவிட்டு, அழிக்கும் வசதிகள் உள்ளன. அதை குறிப்பிட்ட வாக்காளரே செய்யலாம். அல்லது வேறு யாரோ ஒருவர் கூட செய்யலாம். National electoral purification and authentication program என்கிற சிஸ்டம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.  போலி வாக்காளர்களை நீக்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைக்கும் பணிகளை செய்தார்கள். ஆந்திரா, தெலங்கானாவில் இதை காட்டி 46 லட்சம் பேரை நீக்கினார்கள். இதை எதிர்த்து ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் சீனிவாஸ் என்பவர் பொது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நாடு முழுவதும் இதுபோல கோடிக் கணக்கானவர்களை நீக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நமது வாக்காளர் பட்டியலில் இருந்து 12.70 கோடி பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 4 கோடி பேர் முஸ்லீம்கள். 3 கோடி பேர் பட்டியல் இனத்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் பாஜகவுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்கிற சிறிய இனக்குழுக்கள் ஆகும். கன்னியாகுமரியில் 42 கிராமங்களை சேர்ந்த 52 ஆயிரம் வாக்குகள் ஒன்றுமில்லாமல் போனது. அது குறித்து நாம் விவாதிக்கவில்லை. ஜனவரியில் அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால் வாக்களிக்க போகும்போது அவர்களுக்கு வாக்கு இல்லை. அவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள்.   வாக்குப்பதிவு மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வழங்கினால் வாக்காளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும் என்று கூறி அழிக்கிறார்கள். அனைத்து விதமான சூத்திரங்களையும் கடைபிடித்து, இந்த குற்றச்செயலை அவர்கள் செய்துள்ளனர்.

தற்போது ராகுல்காந்தி செய்தது குற்றச்செயல் என்று வைத்துக்கொள்வோம். நாட்டு மக்களிடம் மன்னிபு கேட்க வேண்டும் சொல்கிறார்கள். அப்போது ராகுல்காந்தி மீது மோசடி வழக்கு தொடருங்கள். அவர் வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவிறக்கம் செய்தது குற்றமா? ஆய்வு செய்தது குற்றமா? இந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று சொன்னது குற்றமா? என்று வழக்கு தொடருங்கள். நீங்கள் தான் யோக்கியர்கள் ஆகிவிட்டதே. பிறகு எதற்காக ராகுல்காந்தியின் சம்மதத்தை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்களே வழக்கை தொடருங்கள். பொதுவெளியில் விசாரிக்கலாமே? மகாதேவபுரா தொகுதியில் நடந்த தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக பிரதமரை குற்றம்சாட்டுவதா? என்கிறார்கள். திருடன் எல்லோருடைய வீட்டிலும் திருடினால்தான் திருடன். உங்கள் ஒருவர் வீட்டில் மட்டும் திருடினால் அவர் திருடன் கிடையாது என்பது போன்று உள்ளது தேர்தல் ஆணையத்தின் பதில். தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரம் தொடங்கி இன்றைக்கு வாக்காளர் பட்டியல் வரை நெடு நாட்களாக மோசடி செய்துகொண்டு வருகிறது. பெரிய அளவில் கொண்டுவருகிறபோது யாரால் கண்டுபிடிக்க முடியும்? ராகுல்காந்தி தன்னிடம் உள்ள மிஷினரியை பயன்படுத்தி கண்டுபிடித்துவிட்டார். இதேபோல் நாடு முழுவதும் 100 சட்டமன்றத் தொகுதிகளில் செய்வோம் என்று தேர்தல் ஆணையம் சொன்னால், அது யோக்கியமான ஆணையமாகும்.

குஜராத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குகள் அதிகரித்ததாக சொல்லி காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அப்போது 15 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக சொன்னார்கள். பாஜக கடந்த தேர்தலில் 99 இடங்களில் வென்ற நிலையில், இம்முறை 150க்கும் மேற்பட்ட அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். அவர்கள் மிகவும் திட்டமிட்டே வேலை செய்கிறார்கள். பாஜக மக்கள் வாக்களித்து வெற்றிபெற்று 100 வருடங்கள் ஆட்சியில் இருந்தாலும் கவலை இல்லை.  ஆனால் மக்கள் வாக்களித்திருக்க வேண்டும். அந்த வெளிப்படைத்தன்மை வேண்டும். வெளிப்படைத் தன்மையை ஒவ்வொரு கட்டத்திலும் இந்த தேர்தல் ஆணையம் இருட்டாக்கி கொண்டே வருகிறது. வாக்குரிமை என்பது விடுதலையின் மூலம் நாம் பெற்றதாகும். இதை சரியாக பயன்படுத்தும் வரை தான் ஜனநாயக நாடு.இது தவறாக போனால் இது ஜனநாயக நாடு கிடையாது. அதுதான் இன்று நடைபெறுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ