ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காதது என்பது விஜய் மற்றும் பாஜக இணைந்து நடத்துகிற நாடகம் என்று மூத்த பத்திரிகையாளர் சுபேர் குற்றம் சாட்டியுள்ளார்.


ஜனநாயகன் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. படம் எடுப்பதற்கு கதை, திரைக்கதை எழுதுவது போன்று, ஜனநாயகன் படம் வெளியாகாமல் இருப்பதற்கும் கதை, திரைக்கதை எழுதி, அதை எக்சிகியூட் செய்கிறார்கள். இது விஜய் தரப்பில் நடத்தப்படுகிற டிராமா. பகவந்த் கேசரி படத்தின் உரிமையை வாங்கி ஹெச். வினோத்தை வைத்து தயாரித்தார்கள். ஜனநாயகன் படத்தின் பணிகள் 6 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. பாலையா படத்தை வாங்கி, அதில் விஜய் அரசியல் பேசுகிறார். இந்த படம் ஓடிவிட்டால், தன்னுடைய அரசியலை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று விஜய் எண்ணுகிறார். படம் ஆரம்பித்ததில் இருந்து சிவகார்த்திகேயனின் பராசக்தி தங்களுடன் போட்டிக்கு வருகிறது. ரெட் ஜெயண்ட் தடுக்கிறது என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள். ஆனால் ஜனநாயகன் டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்களே அதை டிரோல் செய்ய தொடங்கிவிட்டனர். இந்த படத்தை வெளியிட அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர். இதில் விஜய் வசனமும் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தணிக்கை செய்கிறபோது அது இந்தியன் 2 அளவுக்கு மோசமாக இருந்துள்ளது. அதை வெளியிட்டால் கடுமையாக ட்ரோல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொன்று ஜனநாயகன் படம் வெளியீட்டின்போது பராசக்தி படமும் வருகிறது. தமிழ்நாட்டில் 1000 திரையரங்குகளில் படத்தை வெளியாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜனநாயகனுக்கு 600 திரையரங்குகள், பராசக்திக்கு 400 திரையரங்குகள் கிடைத்ததால் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்கனவே டிரெய்லர் ட்ரோல் ஆகிய நிலையில், படமும் வெளியாகி ட்ரோல் ஆகினால் அது விஜயின் அரசியல் கேரியருக்கே பிரச்சினையாகும். எனவே அதை எப்படி நிறுத்தலாம் என்று பார்க்கிறார்கள். சென்சாரில் கை வைக்கும் அளவுக்கு வொர்த் இல்லாத படம் ஜனநாயகன். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படம். அதிகபட்சமாக பன்ச் டயலாக்குகளில் பேட் வேர்ட்ஸ் பேசியிருந்தால், அதில் மியூட் போட சொல்லியிருப்பார்கள். ஆடியோ லான்ச் முடித்து வந்தபோது படத்திற்கு 64 கட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி மெயில் அனுப்பியுள்ளனர். தற்போது ரிவைசிங் கமிட்டியில் இடம்பெற்றுள்ள 12 பேர் பார்த்த பின்புதான் சான்றிதழ் வழங்குவோம் என்கிறார்கள். இதனை தொடர்ந்து விஜய் தரப்பில் சான்றிதழ் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். சென்சார் போர்டு தரப்பில் குறைந்தபட்சம் 4 வாரங்கள் கேட்கிறார்கள்.

விஜய் பாஜவால் அரசியலில் இறக்கப்படுகிறார். அவர் ஸ்பாய்லர் என்று நமது சேனலில் தான் 2 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னேன். தற்போதும் சொல்கிறோம் விஜய் ஸ்பாய்லர்தான். அவரை வைத்துக்கொண்டு தலித், இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர்கள், இளம் வாக்காளர்களின் வாக்குகளை பிரிக்கக்கூடிய வேலையை பாஜக செய்கிறது. ஜனநாயகன் படம் 3 மணி நேரம் 3 நிமிடம், 28 வினாடிகள் ஓடுகிறது. அப்போது மூன்று ஷோக்கள் தான் போட முடியும். அதனால் படத்தின் நேரத்தை குறைக்க வலியுறுத்துகிறார்கள். திரையரங்க உரிமையாளர்கள் பர்சென்ட்டேஜ் 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆக உயர்த்தி கேட்கிறார்கள். இந்த பிரச்சனைகளை மறைக்க, படம் ட்ரோல் ஆவதை தடுக்க பாஜகவினர் படத்தை முடக்குவது போன்று முடக்குவார்கள். அவர்களை திருப்பி அடிப்பது போன்று விஜய் நடிக்கிறார்கள். தனி நபர் ஒருவர், தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு செல்கிறார் என்றால், அது மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் கிடைக்காது. இத்தனையும் விஜய்க்கு எளிதாக கிடைக்கும் நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் மட்டும் ஏன் கிடைக்கவில்லை? விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு, வெளி மாவட்டங்களுக்கு தனி விமானத்தில் செல்ல அனுமதி என்று எல்லாவற்றையும் வழங்கும் பாஜக, தணிக்கை சான்றிதழ் மட்டும் வழங்காதது ஏன்?

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகாவை சேர்ந்தவர். அவர் பாஜகவக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் தயாரிப்பாளர் கே.வி.என் என்பவர் பெங்களுருவை சேர்ந்தவர், மற்றொருவர் விஜயின் மேலாளர் ஜெகதீஸ் ஆவர். இவ்வளவு சிக்கலையும் சமாளிக்க விஜயும், பாஜகவும் சேர்ந்து நடத்துகிற நாடகம் தான் இது. தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிட்டால், அரசியல் லாபம் கிடைக்கும் என்று பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். எப்படியும் 2 மாதத்திற்கு படத்தை வெளியிட மாட்டார்கள். தற்போதும் விஜய், பாஜகவை எதிர்த்து பேசுவாரா? என்பதும் சந்தேகம் தான். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் சொல்லப்பட்டிருக்கும் ஆட்சேபனைகளில், விஜய் ராணுவ வீரர் உடையில் இருக்கும் காட்சிகள் தவறாக காட்டப்பட்டிருப்பதாக சொல்லப் படுகிறது. அதற்கு அனுமதி வாங்கவில்லை என்கிறார்கள். அப்படி அனுமதி வாங்காவிட்டால், அந்த காட்சியை நீக்கிவிட்டு சான்றிதழ் வாங்க வேண்டியது தானே. இது ஒரு பொருட்படுத்தக்கூடிய விஷயமே இல்லை. சென்சார் போர்டுக்கும், ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் தொடர்புக்கான நபர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். சான்றிதழுக்கு விண்ணப்பித்து ஆடியோ லான்ச்க்கு போய் விட்டார்கள்.

சென்சார் போர்டில் மாட்டுகிற அளவுக்கு ஜனநாயகன் ஒர்த் இல்லாத படமாகும். தெலுங்கில் போட்ட மசாலாவை எடுத்து, அதைவிட கூடுதலாக மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட படம்தான் இந்த சேகரி. அதையும் திங்க விடாமல் செய்தது விஜயும், அவர்களுடைய கூட்டாளியான பாஜகவும் தான். அதை போக போக விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். மார்ச் மாத தொடக்கத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்துவிடும். தேர்தல் நேரத்தை குறிவைத்து படத்தை வெளியிடுவார்கள் என்று தோன்றுகிறது. அப்போது தனியாக ஆயிரம் திரையரங்குகள் வரை படத்தை வெளியிட முடியும். தேர்தல் நேரத்தில் பன்ச் டயலாக்குளை பேசலாம். தற்போது படம் வெளியாகினால் சப்பென்று போய்விடும். அதே நேரம் படம் முடங்கினால், ஒரு எதிர்பார்ப்பை கிளப்பலாம். இனி விஜயிடம் யாரும் தேர்தல் பணிகள் குறித்துபேச மாட்டார்கள். ஜனநாயகன் எப்போது வெளியாகும் என்று தான் கேட்பார்கள். இது முழுக்க முழுக்க விஜய், பாஜக இணைந்து நடத்துகிற நாடகம் தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


