Homeசெய்திகள்கட்டுரைகல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

-


இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947ல்.. ஆனா கல்வராயன் மலைக்கு எப்போது கிடைச்சுது தெரியுமா?

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

 

ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட நீண்ட நெடிய மலைத்தொடர்ச்சி, கொட்டிக்கிடக்கும் மூலிகைகள், 10க்கும் மேற்பட்ட அருவிகள், ஆறுகள், ஏராளமான நீரோடைகள் என இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கும் இடம் தான் கல்வராயன் மலை. இந்த மலையிலும் , மலையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்தக் கல்வராயன் மலையின் ஒரு சில பகுதிகள் சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்குள்ளும் பெரும்பாலான பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக வளர்ச்சி காணாமல் இருந்து வரும் கல்வராயன் மலைத்தொடர்ச்சி மீது, நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை இப்போது தான் விழுந்துள்ளது. அதுவும் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 உயிர்கள் பறிபோன பின்னரே.

பொதுவாகவே ஓர் ஊர் என்றால் அதற்கென தனிச்சிறப்பு ஒன்று இருக்கும். உதரணமாக நாமக்கல் என்றால் கல்வியில் முதலிடம், திருப்பூர் என்றால் தொழில்துறைக்கு பெயர்போனது. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்க ‘கள்ளக்குறிச்சி என்றாலே கள்ளச்சாராயம்’ என்கிற அளவுக்குத்தான் அம்மக்களின் வாழ்க்கை இருந்து வருகிறது. இந்த மலைத்தொடர்ச்சியில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. அதிலும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான கடுக்காய் மற்றும் கருவேல மரப்பட்டைகள் அதிகம் கிடைப்பதாலும், ஆங்காங்கே நீரோடைகள் இருப்பதால் தண்ணீருக்கும் பஞ்சம் இல்லை என்பதாலும் குறைந்த செலவில் சாராயம் காய்ச்சுவது அங்கு பிரதான தொழிலாகிவிட்டது. அதை வாங்க ஏராளமான குடிமகன்களும் காத்துக்கிடப்பதால், அங்கு சாராய வியாபாரமும் கொடிகட்டிப் பறக்கிறது.
கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது?? கல்வராயன் மலைக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது??

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அப்போது இந்த கல்வராயன் மலை ஜனநாயக நாட்டின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கவில்லை. ஆம், கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் இந்த கல்வராயம் மலையிலிருந்த 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் சடய கவுண்டர், குரும்ப கவுண்டர், ஆர்ய கவுண்டர் ஆகிய 3 ஜாகிதார்களுக்கும் பரிசாக வழங்கப்பட்டன. அதன்பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்த 3 ஜாகிதார்களும் இந்தியாவுடன் இணைய மறுத்து சுயாட்சி செய்து வந்துள்ளனர். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட , ஊர் முக்கியஸ்தர்களாக இருந்த சிலர் எடுத்த முயற்சியின் பேரில் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலாத்தில் எமர்ஜென்சி பிரகடணப்படுத்தப்பட்ட போது, அதாவது 1976ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி தான் கல்வராயன் மலை இந்தியாவிலேயே இணைந்தது. இந்த ஜாகிதார்கள் வாழ்ந்த கோட்டையின் சுவடுகள் இன்னும் கல்வராயன் மலையை ஒட்டிய பழைய பாலப்பட்டு கிராமத்தில் உள்ளன.

என்ன செய்கிறார்கள் மக்கள்?

கல்வராயன் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தொழிலை செய்து வருகின்றனர். நிலம் வைத்திருப்பவர்கள் விவசாயம் செய்து வந்தாலும், பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகளாகவே இருந்து வருகின்றனர். அதுவும் எத்தனைக்காலம் கைகொடுக்கும். இப்போது உழவுக்கு, அறுவடைக்கு, மருந்து தெளிக்க என அனைத்துக் இயந்திரங்கள் வந்துவிட்டன. களையெடுப்பது, நடவு செய்வது போன்ற சில வேலைகளுக்கு பெண்களே போதுமானது. இதுஒருபுறமிருக்க மலைவாழ் மக்களின் நிலை இன்னும் கவலைதரும் ஒன்றுதான். விறகுக்காக மரங்களை வெட்டி விற்பது, தேன் எடுப்பது போன்றவை தான் அவர்களுக்கு இருக்கும் தொழில். ஆனால் இந்த வேலைகளில் கிடைக்கும் வருமானம் போதுமானதா என்றால் கேள்விக்குறிதான்.

இன்னும் சிலரோ திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கோ கேரளா, ஆந்திரா போன்ற இடங்களுக்கு பிழைப்புத்தேடி குடும்பத்துடன் கூலி வேலை பார்க்க சென்றுவிடுகின்றனர். இதனால் அடுத்தத் தலைமுறை பிள்ளைகளும் படிப்பு வாசமின்றி குழந்தைத் தொழிலாளர்கள் ஆகிவிடுகின்றனர். கடந்த தலைமுறையைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

இதனாலேயே இங்கிருக்கும் பலருக்கும் சாராயம் காய்ச்சுவது தொழிலாகிப்போனது. பல நாட்கள் ஊரல் போட்டு சாராயம் காய்ச்ச அடர்ந்த மலை உதவுகிறது. பாரல் பாரல்களாக சாராயம் காய்ச்சி அதனை பெரிய பெரிய டியூப்களில் அடைத்து மலையிலிருந்து கீழே இறக்கிக்கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். பிழைப்புக்காக சாராயம் காய்ச்சுவது என முன்பிருந்த நிலைமாறி, பெருந்தனக்காரர்கள் மலைவாழ் மக்களை கூலிக்கு ஆள் எடுத்து சாராயம் காய்ச்ச செய்யும் நிலை இப்போது இருந்து வருகிறது. அந்த மக்களுக்கும் வேறு தொழில் தெரியாது என்பதால் இதையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இப்போது உரிமையாளர்களும், விற்பனையாளர்களுமே இந்த வருமானத்தில் பலனடைந்து வருகின்றனர். கல்வராயன் மலை மக்கள் சாராயம் காய்ச்சும் கூலிகளாகவே இருக்கின்றனர்.

எப்போது மாறும் இந்த நிலை??

முற்றிலுமாக இயற்கை எழில் கொஞ்சும் சூழல் கொண்டது கல்வராயன் மலை. இங்கு வேலைவாய்ப்பை பெருக்கும் முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக இங்கு கடுக்காய் உள்ளிட்ட மூலிகைப் பொருட்களின் விளைச்சல் அதிகம். இங்குக் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணம் நிறைந்த கடுக்காயை, பிற இடங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்ல ஏதுவாக கடுக்காய் தொழிற்சாலை அமைக்கலாம். இது இந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

மேலும், இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, அம்மன் நீர்வீழ்ச்சி, வெள்ளப்பாறை நீர்வீழ்ச்சி, காவியம் நீர்வீழ்ச்சி, பனிமலை மேக அருவி, தேன்பாடி அருவி, முட்டல் சின்ன அருவி, மான்கொம்பு நீர்வீழ்ச்சி என 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மலை உச்சியில் சின்னதிருப்பதி என்றழைக்கப்படும் கோவில் அமைந்துள்ளது. கோமுகி அணை, கரியகோயில் நீர்தேக்கம் உள்பட ஏராளமான நீர்தேக்கங்களும் உள்ளன. அடுக்கடுக்கான வலைவுகளைக் கொண்ட மலைச்சாலைகள் என சிறந்த சுற்றுலாத்தலாமாக இருக்கும். ஆனால் இந்த இடங்களுக்குச் செல்ல போதிய சாலை வசதிகள் கூட இல்லை.

ஆகையால் அரசு போதிய சாலை வசதி, உணவகங்கள், போக்குவரத்து வசதி, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து, படகு சவாரி, பூங்காக்கள் உள்ளிட்டவற்றை அமைத்தால் இங்குள்ள மக்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாக அமையும். அத்துடன் போதிய ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கூடிய பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதன் மூலம் அம்மக்களை நிச்சயம் சாராயம் காய்ச்சுதல் மற்றும் குடிக்கு அடிமையாகிக் கிடப்பதில் இருந்து மீட்டுக்கொண்டுவர முடியும்.. பள்ளிகள், சாலை, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு கல்வி எளிதாக சென்றுச்சேரும்.

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

ஆயிரம் சொல்லலாம்..

எந்த காலத்தில் இருக்கிறீர்கள்.. காலம் எப்போதோ மாறிவிட்டது. எல்லோரும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஆயிரம் சொல்லலாம். அது ஒரு வகையில் உண்மைதான். கடந்த தலைமுறை அதாவது இன்றைய 90ஸ் கிட்ஸ்களின் அப்பா தலைமுறையைச் சேர்ந்தவர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு ஒரு சிலர் மட்டுமே பள்ளிப் படிப்பையே எட்டிப்பார்த்தனர். இன்றைய 90ஸ் கிட்ஸ்கள் தான் பெரும்பாலான குடும்பங்களில் முதல் பட்டதாரிகளாக ஆகியிருக்கிறார்கள். அப்படி படிப்பு வாசனை பட்ட மக்கள் தான் வேலைவாய்ப்பு, வருமானம் என தங்களது தகுதிகளை உயர்த்திக்கொண்டுள்ளனர். பல இடங்களில் பள்ளிக்கூடங்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் வந்துவிட்டன. ஆம் உண்மைதான்.. ஆனால் இவை அனைத்தும் நூற்றில் 20 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 80% மக்களின் நிலை.

இன்றும் பிரசவம், விபத்து, பாம்புக்கடி போன்ற அவசர சிகிச்சைகளுக்கு 40, 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் தான் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து வருகிறது. பள்ளிப்படிப்பை முடிக்காத, ஏன்.. 10ம் வகுப்பை கூட தாண்ட விடாமல் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் இன்னும் நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவேண்டிய சிறுவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரும் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். படிப்பை முடித்தவர்களோ, படிப்பை பாதியில் முடித்தவர்களோ வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் வெளியூர்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய சூழலே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து வருகிறது. அப்படியிருக்க அங்கேயே இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் இல்லையா? அங்கு வசிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அரசு யோசிக்க வேண்டாமா?

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

இதுதான் தீர்வு..

கல்வராயன் மக்களின் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக மத்திய – மாநில அரசுகள் சிறப்பு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அம்மக்களை சென்று சேர்வதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கடுக்காய் தொழிற்சாலை அமைப்பதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல் அங்குள்ள மூலிகைகளை பயன்படுத்தும் விதமாக மூலிகைகள் சேகரிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதம் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். போதிய சாலை வசதிகளை ஏற்படுத்தி, கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக மாற்றினால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

MUST READ