spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅதிமுகவிடம் ரூ.100 கோடி வாங்கிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமக! ரகசியங்களை உடைத்த ராஜகம்பீரன்!

அதிமுகவிடம் ரூ.100 கோடி வாங்கிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமக! ரகசியங்களை உடைத்த ராஜகம்பீரன்!

-

- Advertisement -

பாமக நிறுவனர் ராமதாசை தனிமைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறார். ஆனால் அவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் பல்வேறு கட்சியினரும் அவரை சந்தித்து பேசி வருகிறார்கள் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

we-r-hiring

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல் வலுத்து வருவது தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்தார். இதனை தொடர்ந்து விசிகவின் வன்னியரசு சந்தித்துள்ளார். இதனை அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த கால அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும், ராமதாஸ் மீது விசிக பேரன்பு கொண்டு அம்பேத்கர் சுடர் விருது வழங்கியுள்ளது. படையாட்சி – பறையர் மோதல் என்பது ராமதாஸ், திருமாவளவனுக்கு முன்பே இருந்துள்ளது. அன்புமணிக்கு என்ன பிரச்சினை என்றால் ராமதாசை தனிமைப்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் அவர் தனிமைப்படுத்த முடியாதவர். பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வந்து பார்க்கக்கூடிய செல்வாக்கு மிக்க ஒருவர் என்று சொல்கிறபோது அன்புமணிக்கு அடிவயிற்றில் பட்டாம் பூச்சி எல்லாம் பறக்கிறது. கலைஞர் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் கட்சி தலைமை பொறுப்பை ஏற்றது போல, ராமதாஸ் பாமகவில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு அன்புமணி கண்டுபிடித்த ஒரு குறுக்குவழி இப்போதே அவருக்கு நினைவு சரியில்லை என்பதாகும்.

இலந்தை பழம் விற்றவர்களுக்கு எல்லாம் கட்சியில் பொறுப்பு தருகிறார் ராமதாஸ் என்று அன்புமணி சொல்கிறார். அவர் யார் என்று சொல்ல வேண்டாமல்லவா? அப்போது பாமக சாமானியர்களுக்கான கட்சி இல்லையா? அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டுதான் அன்புமணி மத்திய அமைச்சராக ஆகினார். பாமகவில் அருள் இருக்கிறாரே, அவரை சொல்கிறாரா? ராமதாசுக்கு நினைவு சரியில்லை என்று பாமகவினரை தானே நம்ப வைக்க வேண்டும். ஏன் கூட இருப்பவர்களிடம் சொல்கிறீர்கள்?. தந்தையர் தினத்தன்று ஸ்டேஜ் டிராமா போன்று மண்ணிப்பு கேட்பீர்கள். அந்த மண்ணிப்பை யாரிடம் கேட்க வேண்டும்?. நேரடியாக நீங்கள் தைலாபுரத்துக்கு சென்று மண்ணிப்பு கேட்க வேண்டும். மருத்துவர் ராமதாசை எதிர்கொள்ள அன்புமணியால் முடியவில்லை. தனது மனைவி சவுமியாவை, ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது என்று அன்புமணி சொல்கிறார். இதன் மூலம் குடும்ப அரசியல் உச்சத்தில் இருப்பது தெரியவருகிறது. யார் சொல்வதை யார் கேட்பது என்பதுதான் முக்கியமாக உள்ளது.

cv shanmugam

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாசை சந்தித்தது தனக்கு தெரியாது என்று அன்புமணி சொல்கிறார். மாநில அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் இருக்கும் சி.வி.சண்முகம், ராமதாசை சந்தித்தது தனக்கு தெரியாது என்று அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய். அல்லது அன்புமணிக்கு தெரியாமல் சி.வி.சண்முகத்தை சந்தித்தன் மூலம் ராமதாஸ் தனியாக தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு தனக்கு தெரியாமல் தேர்தல் செலவுக்கு பணம் வாங்கி விட்டார் என்று மறைமுகமாக குற்றம்சாட்டுகிறாரா? அதிமுகவினர் ஏற்கனவே சி.வி.சண்முகம் ரூ.100 கோடியை தேர்தல் செலவுக்காக கொடுத்துவிட்டார் என்று சொல்கிறபோது, அதை தெரியாமல் ராமதாஸ் வாங்கிவிட்டார் என்பதுதான் இவர்களுக்குள் இருக்கும் தகராறு. இந்த முறையும் அவர்தான் வாங்க போகிறார். தேர்தல் கூட்டணி மூலமாக வரபோகிற வருமானம், யாரிடத்தில் வந்து சேர வேண்டும் என்கிற போராட்டத்தை தான் இருவரும் கொள்கை போராட்டமாக அறிவிக்கிறார்கள். ராமதாஸ் வார வாரம் செய்தியாளர்களை சந்தித்துக அன்புமணியை டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேரடியாக சொல்லாமல் அவருக்கு குழந்தை தன்மை வந்துவிட்டது என்று அன்புணி சொல்கிறார்.

பாஜக அல்லாத ஒரு அரசியல் தான் சட்டப்பேரவை தேர்தலுக்கு சரியானது என்று ராமதாஸ் நினைக்கிறார். அன்புமணி, 90 சதவீத கட்சி தன்னிடம் உள்ளதாக சொல்கிறார். அதையே தான் ராமதாசும் சொல்கிறார். இவர்கள் இருவரும் மாறி மாறி பேசி, வன்னிய மக்களை குழப்புகிறார்கள். பாமகவில் பொதுக்குழுவை கூட்ட நிறுவனருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று விதிகள் உள்ளது. ராமதாஸ உருவாக்கிய கட்சி பாமக. அவர் பார்த்து உங்களை தலைவராக நியமித்தார். இனிஷியலை கழித்துவிட்டால் அன்புமணி என்கிற பெயருக்கு பாமகவில் கிளைச் செயலாளர் பதவி கூட தர மாட்டார்கள். அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ராமதாஸ் கேட்கிறார். காரணம் ராமதாசை யாரும் உருவாக்கவில்லை. ஆனால் அன்புமணியை, அவர்தான் உருவாக்கினார். அதனால் இருவரையும் ஒன்றாக ஒப்பிட முடியாது. என்றைக்காவது அன்புமணி கொள்கையை பேசி இருக்கிறாரா? திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்புமணி முன்வைப்பார். ஆனால் சித்தாந்த ரீதியாகவோ, கோட்பாட்டு ரீதியாகவோ அவர் மாநாட்டில் பேசி பார்த்திருக்கிறார்களா? ஏனென்றால் அவருக்கு அதெல்லாம் தெரியாது.

அன்புமணிக்கு, தன் மீது சிபிஐ வழக்கு வரக்கூடாது. பாஜகவிடம் போய் முழுமையாக சரணடைய வேண்டும். சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். அறக்கட்டளை சொத்து யாருக்கு என்பதை தான் இவர்கள் வேறு மாதிரியாக நம்மிடம் சொல்கிறார்கள். திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு ஜனநாயக ரீதியாக எந்தவித தடையும் கிடையாது. ஏனென்றால் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் பலர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் பாமகவுக்கு என்று, திமுகவுக்குள் ஒரு லாபி உள்ளது. எனவே பாமகவை வரவேற்க அங்கே ஒரு தரப்பினர் உள்ளனர். ஆனால் விசிக இதை விரும்புமா? விரும்பாதா? என்கிற கேள்வி இருக்கிறது. பாமக ஒரு பகுதியாக வந்தால் அதை பரிசீலிக்கும் இடத்திற்கு ஒருவேளை திருமாவளவன் வந்தால், திமுக ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. திமுக கூட்டணியை நோக்கி பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு உள்ளதா? என்பதை நோக்கிய ஒரு படியாக தான் செல்வப்பெருந்தகை சந்திப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்..

MUST READ