spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஇளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?

இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?

-

- Advertisement -

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.

we-r-hiring

சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலுக்கு வந்த பெண்ணின் 10 சவரன் நகை காணாமல் போய் உள்ளது. அந்த பெண்கள் நகையை காரின் பின்புற சீட்டிற்கு அடியில் வைத்திருந்தாக சொல்கின்றார். அவர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு போய்விட்டு வந்துள்ளார். அப்படி இருக்கும்போது அவர் வாகனத்தை பார்க்கிங் செய்ய எதற்கு அஜித்குமாரிடம் தர வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அவருக்கு கார் ஓட்ட தெரியாது. அதனால் வேறு நபர்களை வைத்து காரை பார்க்கிங் செய்துள்ளார். அவர் மடப்புரம் கோவிலில் வாட்ச் மேனாக இருந்துள்ளார். அவர் மீது திருட்டு உள்ளிட்ட எந்த புகார்களும் வந்ததில்லை. கோயிலில் கடை வைத்திருப்பவர்கள், பணியாளர்கள் மத்தியில் அவர் மிகவும் நல்லவர் என்கிற எண்ணமே இருக்கிறது.

இந்நிலையில், நகை திருட்டு தொடர்பாக குறிப்பிட்ட காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளிக்காமல், ஒரு ஐஏஎஸ் அதிகாரி மூலம் போன் செய்து சொல்லியுள்ளார். இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார் 5 பேர் சேர்ந்து, அஜித்குமாரை அடித்துக்கொன்றே விட்டனர். இவர்கள் செய்த தவறு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கிற அளவுக்கு கொண்டுபோய் விட்டனர். அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் போன் மூலம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

திமுக, அதிமுக என்று எந்த ஆட்சியாக இருந்தாலும், காவல்துறையின் பயிற்சி அடிப்படையையே மாற்ற வேண்டும். இவர்களை போன்று யார் ஆட்சிக்கு வந்தாலும், இது தொடரவே செய்யும். இதற்கு ஒரே தீர்வு என்றால்? காவல்துறையினருக்கு பயிற்சியின்போதே யாரையும் தொடவே கூடாது என்று உத்தரவிட வேண்டும். காவல் ஆய்வாளர், டிஎஸ்பி போன்ற உயர் பதவிகளில் உள்ளவர்கள், பொதுமக்கள் மீது கை வைக்க மாட்டார்கள். கடைநிலையில் உள்ள காவலர்கள் தான் இந்த செயலை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று தெரியவில்லை. காவல்துறைக்கு வானளாவிய அதிகாரத்தை கொடுத்துவிட்டு, அவர்களை கண்காணிக்கும் வேலையை மேற்கொள்ள வேண்டியது அரிசின் வேலையாகும். இங்கு தான் தவறு நடைபெறுகிறது. மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே கைது செய்யப்பட்ட 5 பேரும், அஜித்குமாரை தாக்கியதாக அவர்களின் குடும்பத்தினர் சொல்கின்றனர். இதேபோல் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரை காவல்துறையினர் அடித்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அதிகாரம் உள்ளது என்பதற்காக ஊரில் உள்ளவர்களை உங்கள் கணவர்கள் அடித்துக்கொள்வார்கள். இதற்கு ஆதரவாக போராட்டம் வேறு நடத்துவீர்களா?

நகை மாயமானால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்களிடம் எங்கே தவறவிட்டார். எங்கு எல்லாம் சென்றார் என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக காவல்துறை ஒரு அப்பாவி இளைஞரை அடித்தே கொன்றிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நாயை தாக்கினால் கூட பீட்டா அமைப்பு வழக்கு தொடரும். அவைகளுக்கு உள்ள பாதுகாப்பு கூட மனிதர்களுக்கு இல்லையே என்கிற நிலைதான் உள்ளது. நாம் ஒட்டுமொத்தமாக அனைத்து காவல் துறையினரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் இது காலங்காலமாக இருந்து வருகிறது. காலர்களுக்கு பயிற்சி காலத்தின்போதே அவர்களை கொடுமைப்படுத்தப்படுவது, விடுமுறை வழங்காமல் அவர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தும் நிலைதான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த பயிற்சி முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு உளவியல் நிபுணர்களை நியமித்து, அவர்களுக்கு  என்ன மாதிரியான பயிற்சிகளை வழங்கலாம் என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்றால்? எடப்பாடி ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை மறுத்தார்கள். ஆனால் திமுக அரசு, 5 காவலர்களை கைது செய்திருக்கிறது. இது வரவேற்கதக்க ஒன்றாகும். இந்த வழக்கில் நீதிமன்றம் சொல்வதை செய்ய தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவறான எப்.ஐ.ஆர். ஏன் போட்டார்கள்? அதில் என்ன உள்ளது? சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த விசாரணையின்போது இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. இனிமேல் இதுபோன்று நடக்காது என்று சொன்னதும் முதலமைச்சரே பாதிக்கப்பட்டவர்களிடம் போன் செய்து மன்னிப்பு கோரியது நாட்டில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிகழ்வாகும். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடிப்பதும், பொதுமக்கள் மீது பல்வேறு மனித உரிமை மீறல்களும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் திருப்புவனம் இலைஞர் மரண குறித்து பேச அவர்களுக்கு அறுகதையே கிடையாது. குஜராத்தில் எத்தனை கொடூரங்களை அவர்கள் அரங்கேற்றினார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

திருப்புவனம் இளைஞர் மரணத்தில் நடைபெற்றது முழுமையாக குற்றமாகும். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் அரசு இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படி விரைந்து குற்றவாளியை கைதுசெய்து, அவருக்கு தண்டனை வாங்கி தந்ததோ அதுபோன்று அஜித்குமார் மரணத்தில் தொடர்புடையவர்கள் மீதும் மிக கடுமையான தண்டனையை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் காவல்துறையினரால் ஏற்படும் மரணங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. பயிற்சியின்போது அவர்களுக்கு சுதந்திரமாகவும், துன்புறுத்தாமலும் பயிற்சி அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போன்று வழக்குகளில் தொடர்புடையர்கள் மீது தொடாமல் விசாரிக்க பயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காவல்துறை பயிற்சி என்பது தண்டனை வழங்கும் பணியாக அரசு மாற்றி வைத்துள்ளது. எனவே சிறந்த அதிகாரிகளை நியமித்து, காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். காவல்துறையை சுத்தப்படுத்தவும், அந்த துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நமது கோரிக்கையாக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ