spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடி வருகை: குழப்பத்தில் என்டிஏ! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

மோடி வருகை: குழப்பத்தில் என்டிஏ! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

பிரதமர் மோடி வருகையின் போது கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைவரும் மேடையில் ஏற வேண்டுமெனில் அதிமுக நிறைய விட்டுத்தர வேண்டிய நிலை ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பிரதமர் மோடியின் தமிழக வருகை, அதனை ஒட்டி என்டிஏ கூட்டணி கட்சிகளிடம் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். அதற்கு முன்னதாக அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை அவர் பீஸ் போன கோயலாக தான் இருக்கிறார். காரணம் அப்படி எல்லாம் தொகுதி பங்கீடு உடனடியாக வராது. ஓபிஎஸ் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சொல்கிறார். டிடிவி தினகரன், கூட்டணி குறித்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டார். பழைய என்டிஏ கூட்டணியில் இன்னும் முடிவு செய்யாமல் இருப்பது தேமுதிக, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் மட்டும் தான். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், அந்த இடத்திற்கு செல்லலாம் என பிரேமலதா விஜயகாந்த் நினைக்கிறார். அதன் காரணமாகவே அவர் கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. ஒருவேளை ஒரு ராஜ்யசபா இடம், 25 சீட்டுகள் கொடுத்தால் பிரேமலதா என்டிஏ கூட்டணிக்கு 23ஆம் தேதியே ஒப்புக்கொள்வார். ஆனால் அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளுமா?

"பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்"- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

பாமகவுக்கு 17 இடங்கள் முடிவாகிவிட்டது. கூடுதலாக ஓரிடம் கேட்கிறார்கள். 18 இடங்கள் கொடுத்துவிடுவார்களா? பாஜகவுக்கு ஒரு 35 இடங்கள் என்கிறபோது கிட்டத்தட்ட 75 இடங்கள். அப்போது எஞ்சிய இடங்களில் அதிமுக போட்டியிட முடியுமா? ஒரு கூட்டணியில் உள்ள மேஜர் கட்சி, குறிப்பிட்ட தொகுதிகளுடன் நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அப்போது மிக இயல்பாக கூட்டணி கட்சிகளுக்கு மொத்தமாகவே இவ்வளவு தொகுதிகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். அதிகபட்சம் 70 -80 தொகுதிகள் தான் கொடுப்பார்கள். அதற்குள்ளாக எத்தனை கட்சிகள் வருகிறது என்பது தான் கேள்வி. அதற்குள்ளாக அனைத்துக் கட்சிகளுக்கும் தர முடியாது. அப்போது சில கட்சிகளை விடலாம். அவர்கள் தவெகவிடம் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரு புதிய கட்சி வரும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். அதற்கான சாத்தியமே இல்லை. அனைத்துக் கட்சிகளும் என்டிஏவில் இடம்பெற்ற பழைய கட்சிகள் தான்.

அன்புமணி பாமக என்டிஏ கூட்டணிக்கு வந்துவிட்டது. இனி ராமதாஸ் பாமக வருமா? அப்படி வந்தால் பி பார்மில் யார் கையெழுத்து போடுவார்? பாமக இப்படி தான் இருக்கும். ராமதாஸ் பாமக என்ன செய்வது என்று யோசிக்கிறது. விஜய் கூட்டணிக்கு செல்வதில் சில கௌரவ சிக்கல்களும், திமுக அணிக்கு செல்வதில் சீட்டு எண்ணிக்கையில் சிக்கல்களும் உள்ளன. அதை தாண்டி ராமதாஸ் முடிவு எடுத்தார் என்றால் அது வேறு விஷயம். பிரதமர் மோடி தமிழகம் வருகிறபோது கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் மேடைக்கு  வர வேண்டும் என்றால் அதிமுக தற்போதே நிறைய விட்டுக் கொடுத்தல்களை செய்ய வேண்டும். தேமுதிக வர வேண்டுமெனில் ராஜ்யசபா சீட்டு உடனே அதிமுக தர வேண்டும். டிடிவி தினகரன் வர வேண்டும் என்றால், மத்திய இணை அமைச்சர் பதவி தருவதாக அமித்ஷா உறுதி அளிக்க வேண்டும். ஓபிஎஸ் வருவது என்றால் அவருக்கான எதிர்கால திட்டம் குறித்து செல்ல வேண்டும். தவெக கூட்டணி என்னவாகும் என்றால்? விஜய் ஜனநாயகன் குறித்தும் வாய் திறக்கவில்லை. கூட்டணி குறித்தும் வாய் திறக்கவில்லை. அதுபாட்டுக்கு தனி ரூட்டில் செல்கிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் ஒரே சிக்கல் காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான். சர்ச்சைகள் தொடர்வதும் நல்லதுக்கு அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரியும். எனவே தேர்தல் அறிவிப்பு வெளியாவதை ஒட்டியே களம் தேர்தலுக்கு தயாராகும். 2026 தேர்தலில் பாஜக மெஷினரியின் நோக்கம் என்பது, காங்கிரசை திமுக கூட்டணியில் இருந்து பிரிப்பதாக தான் இருக்கும். இந்தியா கூட்டணி இல்லாமல் போவது என்பது பாஜகவுக்கு நன்மையாகும். இந்தியா கூட்டணியின் பெரிய பலம் என்பது தமிழ்நாடு அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தான். காங்கிரசை ஆதரிக்க ஆதரிக்க விஜய்க்கு பலம் குறையும். காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தவெக பதில் சொல்ல வேண்டி வரும். விஜயுடைய பிரெஷ்னஸ் போய்விடும். தாங்கள் புதியவர்கள் என்கிற விஜயின் வாதம் அடிபட்டு போய்விடும். நாட்டின் பழமையான கட்சியும், புதிதாக தோன்றிய கட்சியும் ஒன்றாக இணைந்தால் என்ன ஆகும்? கூட்டணிக்கு வருகிறபோது கூட்டணி கணக்குகள் முழுமையாக மாறிவிடும்.

MUST READ