spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

”கனவான்களே, நான் நம்முடைய போர் முயற்சியைத் தீவிரமானதாக ஆக்கப் போகிறேன்” – இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் வின்ஸ்டன் சர்ச்சில்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் - ரயன் ஹாலிடேஹோமரின் உலகப் புகழ்பெற்ற இலக்கியமான ஓடிசியின் கதாநாயகனான ஒடிசஸ், டிராய் நகரில் பத்து ஆண்டுகள் நடைபெற்றப் போரின் முடிவில் தன் சொந்த ஊரான இத்தாகாவுக்குத் திரும்புகிறான். ஆனால் அங்கிருந்து புறப்படும்போது அவனுக்குத் தெரியாது, தன் பயணம் பத்தாண்டுகள் நீடிக்குமென்று!

அவன் தன் பயணத்தின்போது கடும்புயல்களையும், கடற்சுழிகளையும், ஆறு தலைகளைக் கொண்ட ஒரு கொடூர விலங்கையும், ஓர் ஒற்றைக் கண் அரக்கனையும் எதிர்கொள்கிறான். அவன் ஏழு ஆண்டுகள் ஒரு கைதியாகப் பிடித்து வைக்கப்படுகிறான். கிரேக்கக் கடவுள் பொசைடனின் கோபத்திற்கும் அவன் ஆளாகிறான். இதற்கிடையே அவனுடைய அரசாங்கத்தையும் அவனுடைய மனைவியையும் கவர்ந்து கொள்ள அவனுடைய எதிரிகள் கழுகுகள்போல வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

we-r-hiring

இவை அனைத்தையும் ஒடிசஸ் எப்படி எதிர்கொண்டான்? இவ்வளவு தடைகளையும் அவன் எவ்வாறு கடந்தான்?

தலைமைத்துவம், துணிச்சல், சுய ஒழுங்கு ஆகியவற்றின் உதவியுடன் அவற்றை அவன் வெற்றிகரமாகக் கடந்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, விடாமுயற்சி அவனுக்கு உறுதுணையாக இருந்தது.

நாம் ஏற்கனவே ஜெனரல் யுலிசீஸின் சளைக்காத முயற்சியைப் பார்த்திருந்தோம். ஒடிசஸும் சளைக்காமல் பத்து ஆண்டுகள் போரிட்டதால்தான் வெற்றி பெற்றான். இந்த இரண்டும் ஒரே ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டிருந்தன. சளைக்காமல் தொடர்ந்து முயற்சித்ததன் மூலம் அதை அவர்கள் முறியடித்தனர்.

ஆனால், அரக்கர்கள், கடவுளின் கோபம், இயற்கையின் சீற்றம் ஆகியவற்றைப் பத்தாண்டுகளாகத் தொடர்ந்து துணிவோடு எதிர்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்புவது என்பது முற்றிலும் வேறுபட்டக் கதை. அதற்கு அவனுக்குத் தேவைப்பட்டது விடாமுயற்சி.

ஒரு கடினமான பிரச்சனையைத் தீவிரமான உறுதியுடன், அது தீர்க்கப்படும்வரை தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருப்பதுதான் சளைக்காத முயற்சி. அதை நிறையப் பேர் செய்துள்ளனர். ஆனால் விடாமுயற்சி என்பது பெரியது. அது ஒரு நீண்டகாலப் போராட்டம். அது ஒற்றைச் சுற்றில் முடிந்துவிடுகின்ற ஒரு சண்டையல்ல.

வாழ்க்கை என்பது ஒரே ஒரு தடையை மட்டுமே உள்ளடக்கியது அல்ல, அது எண்ணற்றத் தடைகளை உள்ளடக்கியிருக்கும். நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு, எப்படியோ, எந்த விதத்திலோ, அதை நாம் அடைந்தே தீருவோம். எதுவும் எவரும் நம்மைத் தடுத்து நிறுத்த நாம் அனுமதிக்க மாட்டோம் என்ற தீர்க்கமான உறுதி அதற்குத் தேவைப்படும்.

சளைக்காத முயற்சி என்பது ஒரு செயல்நடவடிக்கை. விடாமுயற்சி என்பது மன உறுதி. ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து வேலை செய்யும்.

மனித வரலாறு நெடுகிலும், தனிமனிதர்களையும் குழுக்களையும் பாதித்த, தீர்க்கப்படவே முடியாது என்று தோன்றிய பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அத்தீர்வுகள் சில நேரங்களில் தொழில்நுட்பத்தின் வடிவில் இருந்தன, சில நேரங்களில் வன்முறையின் வடிவில் இருந்தன, சிலநேரங்களில் முற்றிலும் புதிய வழியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிந்தனையின் வடிவில் இருந்தன.

அவற்றில் ஓர் உத்தி மற்ற அனைத்து உத்திகளையும்விடச் சிறப்பாக வேலை செய்தது. அது நல்ல சூழ்நிலைகளிலிருந்து ஆபத்தான சூழ்நிலைகள் வரை அனைத்துச் சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டது.

உலகை முதன்முதலாகக் கப்பல் மூலம் சுற்றி வந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருந்த மெகல்லனிடம் உதவியாளராக இருந்த அந்தோனியோ பிகாபெட்டா, மெகல்லனிடம் காணப்பட்டத் திறன்களிலேயே சிறப்பான திறன் என்று எதை வர்ணிக்கிறார் தெரியுமா? அதற்கும் அவருடைய கப்பல் ஓட்டும் திறனுக்கும் தொடர்பு கிடையாது. மற்ற அனைவரையும்விடப் பசியை அதிகமாகப் பொறுத்துக் கொள்கின்ற திறன்தான் அது.

இந்த உலகில், புறக் காரணிகளைவிட மன உறுதியின் தளர்ச்சியால் ஏற்பட்டத் தோல்விகளே அதிகம்.

நாம் திட்டமிட்டுள்ளபடி காரியங்கள் நடக்காவிட்டால், நாம் அது குறித்துப் புலம்புகிறோம், குறை கூறுகிறோம். நமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றபோது நாம் உடைந்து போய்விடுகிறோம். ஆனால் அது குறித்து நாம் எதுவும் செய்வதில்லை.

உண்மையான விடாமுயற்சிக்கு ஒரு சிறப்பு குணம் இருக்கிறது. இறப்பைத் தவிர அதை வேறு எதனாலும் தடுக்க முடியாது.

நம்முடைய நடவடிக்கைகள் ஒடுக்கப்பட முடியும். ஆனால் நம்முடைய மன உறுதியை யாராலும் குறுக்க முடியாது. நம்முடைய திட்டங்கள் முறியடிக்கப்படக்கூடும், நம்முடைய உடல்கள்கூடக் காயப்படுத்தப்படக்கூடும். ஆனால் நாம் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எக்காரணத்தாலும் எவராலும் அழிக்க முடியாது. எத்தனை முறை நாம் கீழே தள்ளிவிடப்பட்டாலும் மீண்டும் ஒரு முறை எழ வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கின்ற ஆற்றல் நம்மிடம் மட்டுமே உள்ளது. அல்லது நாம் வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது இந்த எதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, நாம் ஒரு புதிய இலக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.

மன உறுதி தோற்கடிக்கப்பட முடியாதது. ஆனால் விரக்தி ஏற்படுவது முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது. இதற்கு மேல் தாங்காது என்று நீங்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டால் அதற்கு யார் பொறுப்பு?

நம்முடைய முட்டுக்கட்டைகள்மீது அல்லது அத்தடைகளை ஏற்படுத்தியவர்கள்மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் நமக்கு நம்மீது கட்டுப்பாடு இருக்கிறது. அது போதுமானது.

அதனால், மன உறுதிக்கு ஏற்படுகின்ற உண்மையான அச்சுறுத்தல் நமக்கு நேர்கின்ற விஷயங்கள் அல்ல; மாறாக, நாம்தான் அதற்கான அச்சுறுத்தலாக இருக்கிறோம். நீங்கள் ஏன் உங்களுடைய மோசமான எதிரியாக இருக்க வேண்டும்?

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எல்லாம் நன்மைக்கே – ரயன் ஹாலிடே

MUST READ