spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எதிர்மறையையும் எதிர்பாருங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிர்மறையையும் எதிர்பாருங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

நீங்கள் ஓர் உத்தரவாதத்தை வழங்கும்போது, அங்கே ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது” – பண்டைய கிரேக்க மேற்கோள் வாசகம்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எதிர்மறையையும் எதிர்பாருங்கள் - ரயன் ஹாலிடேஒரு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி, மறுநாள் தாங்கள் செயல்படுத்தவிருந்த ஒரு புதிய திட்டத்தைப் பற்றி எடுத்துரைப்பதற்காகத் தன்னுடைய ஊழியர்களை அழைக்கிறார். அவர்கள் கருத்தரங்கு அறைக்குள் நுழைந்து அங்கிருக்கும் நாற்காலிகளில் அமர்கின்றனர். அந்த அதிகாரி, எடுத்த எடுப்பிலேயே இவ்வாறு கூறுகிறார்: “மோசமான செய்தி ஒன்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். நம்முடைய திட்டம் படுமோசமாகத் தோற்றுவிட்டது. என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்று கூற முடியுமா?”

“இவர் என்ன சொல்கிறார்? திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவே இல்லையே?” என்று அவருடைய ஊழியர்கள் குழம்புகின்றனர்.

we-r-hiring

ஆனால் அந்த நிர்வாக அதிகாரி அதை வேண்டுமென்றே செய்தார். நிர்வாகவியலில் அது ஓர் உத்தி. ஒரு திட்டம் தோற்றுவிட்டதுபோலக் கற்பனை செய்து கொண்டு, அதற்கான காரணங்களைப் பின்னோக்கி ஆராய்வது அது. அந்த உத்தியைக் கண்டுபிடித்த கேரி கிளீன் என்ற உளவியலாளர் அதை ‘முன் பிரேதப் பரிசோதனை’ என்று அழைக்கிறார்.

ஒரு நோயாளியின் எதிர்பாராத மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவர்கள் ஓர  பிரேதப் பரிசோதனையை மேற்கொள்வர். அதிலிருந்து அவர்கள் அறிந்து கொள்கின்ற விஷயங்கள், அடுத்த முறை அதேபோன்ற ஒரு விஷயம் நடக்கின்றபோது, அவர்களுக்கு உதவியாக இருக்கும். மருத்துவ உலகிற்கு வெளியேயும் இதுபோன்ற உத்திகள் கையாளப்படுகின்றன. அவை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வேலையைவிட்டு விலகுகின்றபோது ஒருவரிடம் நடத்தப்படுகின்ற நேர்காணல், ஒரு பெரிய திட்டத்தை நிறைவேற்றியவுடன் அது குறித்து அளிக்கப்படுகின்ற விரிவான விளக்கங்கள், திட்ட மதிப்பீடு போன்றவை அவற்றில் அடங்கும். இவை அனைத்திற்கும் பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது. ஒரு திட்டம் முடிந்த பிறகு அதைப் பற்றி மேற்கொள்ளப்படுகின்ற அலசல் அது.

ஆனால் ‘முன் பிரேதப் பரிசோதனை’ என்பது முற்றிலும் வேறுபட்டது. ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அதில் என்னவெல்லாம் தவறாகப் போகக்கூடும் என்று முன்கூட்டியே கணிப்பது அது. பல திட்டங்கள் தோல்வியைத் தழுவிய பிறகு அவற்றை ஆராய்ந்தால், அவற்றுக்குப் பின்னால், தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய காரணிகள் இருப்பது புலப்படும். ஏராளமான மக்கள் தங்களுடைய திட்டத்திற்கு மாற்றுத் திட்டம் எதையும் வைத்திருப்பதில்லை. தங்களுடைய திட்டம் தவறாகப் போகக்கூடும் என்று அவர்கள் நம்ப மறுப்பதே அதற்குக் காரணம்.

எல்லாத் திட்டங்களும் நாம் திட்டமிட்டபடி நடைபெறுவதில்லை. நாம் இதை மறுத்துவிட்டு, நடைமுறையில் அவை முற்றிலும் வேறு மாதிரி நிகழ்கின்றபோது அதைக் கண்டு அதிர்ச்சியடைவது விநோதமானது.

இது அபத்தமானது. ஒரு தோல்விக்கு உங்களைத் தயார் செய்து கொள்வதை நிறுத்துங்கள்.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எதிர்மறையையும் எதிர்பாருங்கள் - ரயன் ஹாலிடே

பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை விடச் சிறப்பாக வேறு எவராலும் இதை எடுத்துரைத்திருக்க முடியாது. அவர் புகழின் உச்சியிலிருந்து அதலபாதாளத்திற்குச் சென்றார். அது குறித்து ஒரு பத்திரிகையாளரிடம் அவர் பேசியபோது, நீங்கள் பணிவடக்கத்துடன் இல்லையெனில் வாழ்க்கை அதை உங்கள்மீது திணிக்கும்,” என்று று கூறியிருந்தார்.

முன் பிரேதப் பரிசோதனை உத்தி இன்று தொழிலுலகில் பிரபலமாக உள்ளது. இதுவும் ஸ்டோயிசிசத் தத்துவத்தில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் இதைத் தீங்குகள் குறித்த தொழிலுலகில் முன்சிந்தனை என்று அழைத்தனர்.

ஸ்டோயிசிசத் தத்துவவியலாளரான செனகா தன்னுடைய திட்டங்களை இப்படித்தான் அலசுவாராம். எடுத்துக்காட்டாக, அவர் ஒரு தொலைதூரப் பயணம் மேற்கொள்கிறார் என்றால், அத்திட்டம் குறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, எவையெல்லாம் தவறாகப் போகலாம் என்று அவர் சிந்திப்பார். பின் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அவர் ஆய்வு செய்வார். ஒரு புயல் வரக்கூடும், தலைமை மாலுமி நோய்வாய்ப்படக்கூடும். கப்பல் கடற்கொள்ளையரால் தாக்கப்படக்கூடும் என்று அவர் பட்டியலிடுவார்.

நாம் எப்போதுமே இடையூறுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். நம்முடைய திட்டங்களில் இடையூறு குறுக்கிடக்கூடும் என்று நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். வெற்றி, தோல்வி ஆகிய இரண்டுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இனிமையற்ற வியப்பை எதிர்கொள்வதைவிட எதிர்பாராத ஆச்சரியத்தை வரவேற்பது கண்டிப்பாக மகிழ்ச்சியளிக்கும்.

உங்களுடைய உலகம் வெளிக் காரணிகளால் வாக்குறுதிகள் ஆளப்படுகிறது. அங்கு  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. உங்களுக்கு உரிமையானது எல்லா நேரங்களிலும் உங்களுக்குக் கிடைப்பதில்லை – நீங்கள் அதற்காகக் கடுமையாக உழைத்திருந்தால்கூட! தொழில்கள் நேர்மையானவையாக இருப்பதில்லை. இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கிறோம். எல்லோருமே உங்களைப்போல நம்பத்தகுந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியெனில், மக்கள் சில நேரங்களில் தவறிழைப்பர், உங்களுடைய திட்டங்களுக்கு உலை வைப்பர்.

இவை நேரும்போதெல்லாம் நீங்கள் வியப்படைந்தால், நீங்கள் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கப் போவது உறுதி அதோடு அதுவே அடுத்த முறை நிகழ்கின்றபோது நீங்கள் இன்னும் மோசமாக அதை எதிர்கொள்வீர்கள். எல்லாமே தவறாகப் போகும் என்ற ஒன்று மட்டும் தான் ஒரளவு தணிக்கும். ஏனெனில், இவற்றில் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்ற ஒரே விஷயம் நாம் மட்டும்தான்.

இந்தப் பொது விதிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்:

புயலுக்கு முந்தைய அமைதி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

சிறந்தவை நடக்கும் என்று நம்புங்கள், ஆனால் மோசமானவற்றுக்குத் தயாராகுங்கள்.

மிகமிக மோசமான விஷயம் இனிதான் வரவிருக்கிறது.

விஷயங்கள் மேம்படுவதற்கு முன்னால் மோசமடையும்.

இந்த உலகம் உங்களை நன்னம்பிக்கையற்றவர் என்று அழைக்கக்கூடும். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எதிர்பாராத ஒன்றால் தாக்கப்பட்டுக் கீழே தள்ளப்படுவதைவிட இது கண்டிப்பாக மேலானது. நம்முடைய திட்டத்தின் பலவீனங்களை அலசி, என்ன நடக்கக்கூடும் என்பதை முன்னதாகவே கணித்துக் கொண்டால், அவற்றை நம்மால் சரியாகக் கையாள முடியும்.

இன்னல்களுக்கு எதிராக நாம் முன்கூட்டியே தயாராக இருக்கும்பட்சத்தில், துரதிர்ஷ்டம் குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை. எதிர்பார்த்தல் என்ற ஒன்று இருப்பதாலேயே விஷயங்கள் இலகுவாக ஆகிவிடும் என்று கட்டாயமில்லை. ஆனால் அதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதால் அது நம்மை அவ்வளவாக பாதிக்காது.

நம்முடைய எதிர்பார்ப்பின் காரணமாக, பலதரப்பட்ட விளைவுகளை நம்மால் கணிக்க முடியும். அவை எல்லாமே சிறப்பாக இருப்பதற்கு வழியே இல்லை. ஆனால் அவை எப்படியிருந்தாலும் அதை நம்மால் கையாள முடியும். எனவே, துணிந்து செயலில் இறங்குங்கள்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சாதிக்க அதை விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை அடைவதற்காக நீங்கள் உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் அர்ப்பணிக்கிறீர்கள். ஏதோ ஒன்று தவறாகப் போவது என்பது இருப்பதிலேயே மிக மோசமான ஒன்றல்ல. ஆனால் திடீரென்று உங்களை வியப்புக்கு உள்ளாக்குகின்ற ஒன்றுதான் உங்களை நிலைகுலைய வைக்கும். ஏனெனில், எதிர்பாராத தோல்வி நம்மைப் பெருமளவுக்கு ஊக்கமிழக்க வைத்துவிடும்.

ஆனால் எவையெல்லாம் தவறாகப் போகலாம் என்று தங்களுடைய மனத்திற்குள் கணித்து வைத்துள்ள ஒருவர் இப்படி வியப்படைய மாட்டார். ஏமாற்றத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளவரால் எப்படி ஏமாற்ற உணர்வை அனுபவிக்க முடியும்? அவர்கள் அதனால் ஊக்கமிழக்க மாட்டார்கள்.

நம்மிடம் எதிர்பார்ப்பு இருக்கும்போது, பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக் கொள்வதற்கு நமக்கு நேரமிருக்கிறது. அல்லது பிரச்சனைகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேவைப்பட்டால் மாற்று வழியில் செல்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். ஏனெனில், பின்வாங்குவதற்காக நாம் ஏற்கனவே ஒரு வழியை உருவாக்கி வைத்துள்ளோம். விஷயங்கள் நாம் திட்டமிட்டபடி நடக்காவிட்டால் நாம் சுக்குநூறாக உடைந்து போய்விட மாட்டோம், நாம் தைரியமாகத் தாக்குப்பிடிப்போம்.

நாம் தோல்விக்காக நம்மைத் தயார் செய்து கொண்டுள்ளபோதிலும் வெற்றிக்குத் தயாராகவே உள்ளோம்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் – ரயன் ஹாலிடே

MUST READ