spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் - ரயன்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

செவ்வனே செய்யப்படுகின்ற எதுவும், அது எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும், அது உன்னதமானது” – சர் ஹென்ரி ராய்ஸ்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் - ரயன் ஹாலிடேபின்னர் அமெரிக்க அதிபராக உயர்ந்தபோதிலும், ஆன்ட்ரூ ஜான்சன், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு தையற்காரராக இருந்ததைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். “நான் தைத்துக் கொடுத்த ஆடைகள் ஒருபோதும் கிழிந்து போனதுமில்லை, தையல் விட்டுப்போனதும் இல்லை,” என்று அவர் கூறுவார்.

ஒரு முறை அவர் ஒரு பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தபோது, அவரை அவமானப்படுத்த எண்ணிய ஒருவன் அவருடைய பேச்சில் குறுக்கிட்டு, அவருடைய தொழிலாளர் வர்க்கப் பாரம்பரியத்தைச் சுட்டிக்காட்டி அவரை ஏளனப்படுத்த முயன்றான். ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜான்சன், “அது என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. நான் ஒரு தையற்காரனாக இருந்தபோது, மிகச் சிறந்த தையற்காரன் என்று பெயர் வாங்கியிருந்தேன். நான் தைத்துக் கொடுத்த ஆடைகள் என் வாடிக்கையாளர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தின. நான் எப்போதும் வாக்குக் கொடுத்த நாளில் அவற்றைத் தைத்துக் கொடுத்துவிடுவேன். மொத்தத்தில், நான் எப்போதும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தேன்” என்று பதிலளித்தார்.

we-r-hiring

மற்றொரு அதிபரான ஜேம்ஸ் கார்ஃபீல்டு, 1851ல் தன் படிப்புச் செலவைத் தன் கல்லூரி ஏற்றுக் கொண்டால் அங்கு ஒரு துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரியத் தான் தயாராக இருந்ததாகக் கல்லூரி நிா்வாகத்திடம் பேரம் பேசினார். அவர் எந்த அவமான உணர்வுமின்றி, தினந்தோறும் சிரித்த முகத்துடன், தான் ஒப்பும் கொண்டிருந்த துப்புரவுப் பணியைச் செய்து வந்தார். தன் பணியை முடித்தவுடன் அவர் உற்சாகத்துடன் தன்னுடைய வகுப்பிற்குச் சென்றுவிடுவார்.

தன் கல்வியைத் தொடர்ந்து கொண்டே பிற மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டில் அவர் ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய இருபத்தாறாவது பிறந்தநாளின்போது அவா் அக்கல்லூரியின் தலைவராக ஆனார்.

நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்தால் இப்படிப்பட்ட வெகுமதிகள் தாமாக வந்து சேரும்.

இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செம்மையாகவும் உண்மையான பெருமிதத்துடனும் செய்து வந்ததன் மூலம், சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து அதிகார பீடத்திற்குச் சென்றனர்.  அந்த வேலைகளை அவர்கள் மற்ற எவரையும்விட அதிகச் சிறப்பாகச் செய்தனர்.

சில சமயங்களில், நாம் சென்றடைய விரும்புகின்ற இடத்தை நோக்கிய நம்முடைய பயணத்தில், நாம் செய்ய விரும்பாத சில வேலைகளை நாம் செய்ய வேண்டியிருக்கலாம். இதை ஆன்ட்ரூ கார்னகி, “நம்முடைய முதல் சில வேலைகள் நம்மைத் துடப்பத்திற்கு அறிமுகம் செய்து வைக்கின்றன’ என்று மிக அழகாகக் கூறியிருக்கிறார். ஒரு துடப்பத்தைக் கொண்டு ஓரிடத்தைக் கூட்டிப் பெருக்குவதில் எந்த அவமானமும் இல்லை. மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் கிடைத்திருக்கும் மற்றொரு வாய்ப்பு அது.

ஆனால், நீங்கள் எப்போதும் வருங்காலத்தைப்  பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பதில் நீங்கள் பெருமிதம் கொள்வதில்லை. நீங்கள் வேலைக்கு வந்துவிட்டு, கொடுத்த வேலைகளைச் செய்துவிட்டு, மாதாமாதம் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் ஒரு பெரிய ஆளாக ஆகும் கனவோடு வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். “இது வெறும் வேலை. இது நானல்ல. அதனால் இது ஒரு பொருட்டல்ல,” என்ற ரீதியில் நீங்கள் சிந்திக்கிறீர்கள்.

அது வடிகட்டிய மடத்தனம்.

நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் அா்த்தமுள்ளதுதான். சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய செலவுகளைச் சமாளிப்பதற்காக ஓர் உணவகத்தில் வேலை பார்ப்பதுகூட அர்த்தம் வாய்ந்ததுதான். அவை ஒவ்வொன்றும் ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கான ஓர் அருமையான வாய்ப்பு. அகங்காரத்தில் மூழ்கியிருக்கின்ற அற்பர்கள்தான் சில வேலைகள் தங்களுடயை தகுதிக்குக் கீழானவை என்று நினைப்பர்.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் - ரயன் ஹாலிடேநாம் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, அதை நாம் நமக்காகவும் இந்த உலகிற்காகவும் நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்யக் கடமைப்பட்டவர்கள். அதுதான் நம்முடைய தலையாய கடமை. அது நம்முடைய பொறுப்பு. செயல்நடவடிக்கை நம்முடைய முன்னுரிமையாக ஆகும்போது, பகட்டுக்கு அங்கு இடமிருக்காது.

ஓர் ஓவியன் தன் வாழ்நாளில் பல விதமான ஓவியத் துணிகளில் பலதரப்பட்ட ஓவியங்களைத் தீட்டுவான். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் அவன் ஒரே விதமான கவனத்தையும் அர்ப்பணிப்பையும் கொடுத்தாக வேண்டும். அதற்கு அவன் எவ்வளவு தொகை பெறுகிறான் என்பது முக்கியமல்ல.

நமக்கும் அது பொருந்தும். நாமும் நம் வாழ்வில் பலதரப்பட்ட வேலைகளைச் செய்வோம். அவற்றில் சில கெளரவமானவையாக இருக்கலாம், சில நமக்கு ஒரு சுமையாக இருக்கலாம். ஆனால் எதையும் நாம் நம் தகுதிக்குக் கீழானதாகக் கருதக்கூடாது. அனைத்து வேலைகளையும் நாம் நேர்மையுடன் செய்ய வேண்டும்.

சிறிய மற்றும் பெரிய தடைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் எதுவும் நாம் நம்முடைய கடமையைச் செய்வதிலிருந்து நம்மை முழுமையாகத் தடுக்கக்கூடியவையாக இருக்காது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தான் வடிவமைத்தப் பொருட்களில் உள்ளடங்கியிருந்த அம்சங்கள்கூட அழகாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அதை வாடிக்கையாளர்கள் பார்க்கப் போவதில்லை என்பதை அவர் அறிந்திருந்தபோதிலும் அவர் அவ்வாறு நடந்து கொண்டார். அதை அவர் தன் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டாா். ஸ்டீவ் ஜாப்ஸின் அப்பா, சுவரில் பதிக்கப்படக்கூடிய அலமாரியைச் செய்யும்போது, சுவர்ப்புறமாக இருக்கும் அதன் பின்புறம்கூட நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வாராம் அது எவர் கண்களுக்கும் படாது என்பதை அவர் அறிந்திருந்தபோதிலும்! ஜாப்ஸ் எதைச் செய்தாலும் அதைக் கலை நயத்துடனும் அழகுடனும் செய்தார்.

ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறானதுதான். நாம் அடுத்த ஐபேடையோ அல்லது ஐபோனையோ வடிவமைக்கப் போவதில்லை என்பது உண்மைதான். ஆனால் நாம் செய்கின்ற ஒவ்வொன்றையும் வேறு யாரோ ஒருவருக்காகத்தான் செய்து கொண்டிருக்கிறோம். வேலையின் ஒவ்வோர் அம்சத்தையும், குறிப்பாக, பிறர் கண்களுக்குப் படாதவற்றை, நாம் ஸ்டீவ் ஜாப்ஸைப்போல அர்ப்பணிப்புடனும் பெருமையுடனும் செய்ய வேண்டும்.

நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்த, உலகப் புகழ் பெற்ற உளவியலாளரான விக்டர் ஃபிராங்க்கெல் காலங்காலமாகக் கேட்கப்பட்டு வருகின்ற, “வாழ்க்கையின் பொருள் என்ன?” என்ற கேள்வியை ஒரு வித்தியாசமான கோணத்தில் அணுகினார். அக்கேள்விக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு வேறு எவருடையதோ என்பதுபோலத்தான் நாம் பொதுவாக நடந்து கொள்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம்மைச் சார்ந்தது என்று விக்டர் ஃபிராங்க்கெல் கூறினார். ஏனெனில், உலகம் அந்தக் கேள்வியை உங்களைப் பார்த்துத்தான் கேட்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். செயல்நடவடிக்கைகளின் மூலம் அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்க்கை நம்மிடம் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்கிறது. நம்முடைய செயல்நடவடிக்கைதான் அதற்கான விடை. பதிலளிப்பதுதான் நம்முடைய வேலை.

அர்ப்பணிப்புள்ள, சுயநலமற்ற, சரியான செயல்நடவடிக்கையாக அது இருக்க வேண்டும். வாழ்க்கையின் பொருளைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி ஆது. ஒவ்வொரு முட்டுக்கட்டையையும் ஒரு வாய்ப்பாக மாற்றுவதற்கான வழியும் அதுதான்.

இவற்றை நீங்கள் ஒரு சுமையாகப் பார்த்தால், நீங்கள் இவற்றைத் தவறான வழியில் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு விஷயத்தை நீங்கள் எப்படிச் செய்கிறீர்களோ, அப்படித்தான் எல்லாவற்றையும் செய்வீர்கள்.

நம்மால் எப்போதும் சரியான முறையில் செயல்பட முடியும்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயல்முறையைக் கடைபிடியுங்கள் – ரயன் ஹாலிடே

MUST READ