spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமதயானை: எங்கள் கல்வி… எங்கள் உரிமை!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மதயானை: எங்கள் கல்வி… எங்கள் உரிமை!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி

-

- Advertisement -

மனிதவாழ்வின் அடித்தளமாக, பரிணாம வளர்ச்சியின் ஒவ்வோர் கட்டத்தையும் இணைக்கும் புள்ளியாக இருப்பது கல்வியே. உலகில் இன்று அறிவால் மேம்பட்ட இனமாக மனிதர்கள் விளங்குவதற்கு அடிப்படையே, தாங்கள் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து, மற்றவரின் அறிவைப் பெருக்கும் கற்றல் – கற்பித்தல் எனும் வழக்கம்தான். இந்தக் கற்றல் முறை வழியாகவே மனித இனம் தன்னைச் செதுக்கிக்கொண்டது. இன்னும் சொல்லப்போனால், ‘கல்விதான் மனிதகுல வளர்ச்சிக்கே ஆதாரம்’ என்பது எனது ஆழமான நம்பிக்கை.எங்கள் கல்வி… எங்கள் உரிமை! நட்சத்திரங்களைக்கொண்டு திசைகளை அறிந்தும், விலங்குகளைப் பின்தொடர்ந்து பாதைகளை அமைத்தும், பறவைகளைக்கொண்டு காலநிலையைக் கணித்தும், கடல், மலை, மரங்கள், செடி, கொடிகள், பூக்கள் என இயற்கையிலிருந்து நமது அறிவு வெள்ளத்தைப் பெருக்கிக்கொண்டோம். இத்தனை ஆண்டுகளைக் கடந்து, இன்று பூமிக்கு அடியிலும், பாறைகளிலும், பானை ஓடுகளிலும், பனையோலைகளிலும், பட்டயங்களிலும் எஞ்சி நிற்கும் நம் செம்மொழியின் வளங்களெல்லாம் நாம் அடைந்த கல்வியறிவின் வரலாற்றுத் தடயங்களே.

நம் முன்னோர்கள் அவற்றைச் சங்கப் பலகைகள் அமைத்துக் காத்தனர். அவர்களுக்குப் பின் வந்தவர்கள் அந்த அறிவுச் சொத்துகளை அச்சிலேற்றி நவீன தலைமுறையிடம் ஒப்படைத்தனர். இப்படி, கற்கால யுகம் தொடங்கி, இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகம் வரைக்கும் மனிதச் சமூகம், குறிப்பாகத் தமிழ்ச் சமூகம் அடைந்த அறிவு வளர்ச்சி, கற்றல் – கற்பித்தல் எனும் நம்முடைய ஆழமான கல்வி மரபிலிருந்தே உருவானது.

we-r-hiring

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என உலக மாந்தர்கள் யாவரும் சமமென கணியன் பூங்குன்றனாரை அறைகூவல் விடுக்கச்செய்ததும் அவர் பெற்ற பட்டறிவுக் கல்விதான்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’

என திருவள்ளுவர் நமக்கு ஊட்டிய பகுத்தறிவும்,

‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்;
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்’

என திருநாவுக்கரசர் ஏற்றிய சுயமரியாதைச் சுடரும் நமது பண்பாட்டின் வேர்களில் இருந்து கிளர்ந்த கல்வியறிவின் அறவுணர்ச்சிகளே!

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இடைப்பட்ட காலத்தில் நம்முடைய கல்வி அமைப்புகளில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஆதிக்கம், மாபெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. சாதியப் படிநிலைகளாலும் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளாலும்

பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெறுவதிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதற்குத் தீண்டாமை உள்ளிட்ட பிற்போக்குக் கருத்துகள் உறுதுணை செய்தன. அனைவரும் கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலை நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தபோது, அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு, நிலைமையை மாற்றும் தேவை உருவானது. மக்களை ஒருமுகப்படுத்தி, அவர்களுக்கான நியாயமான அடிப்படை உரிமைகளையும் அதிகாரங்களையும் மீட்டெடுக்க ஓர் அமைப்பு அவசியப்பட்டது.எங்கள் கல்வி… எங்கள் உரிமை! தென்னாட்டில் அப்படி உருவான அந்த அமைப்பின் தோற்றத்துக்குப் பிறகே, அதுவரை பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கும் உணர்ச்சி தென்னாட்டு மக்களுக்குள் தீப்பிடித்தது போலப் பரவத் தொடங்கியது. அந்த அமைப்பின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் தன் தோளில் சுமந்து மக்களிடையே கொண்டுசேர்த்து, மாற்றங்களை உருவாக்கிய ஆற்றல்மிக்க தலைவர்கள் உருவான இடமாக, கல்விச்சாலைகளே இருந்தன.

ஆம், பல நூற்றாண்டுகளாக நமக்குக் கிடைக்காமலிருந்த கல்வி உரிமையை மீட்டுத்தந்த தளபதிகள், மாணவர்கள் படையிலிருந்தே உருவானார்கள். அவர்களை ஆசிரியர் சமூகமே வழிநடத்தியது. பின்னாளில் அந்த மாணவர்களே, ஆசிரியர்கள் ஆனார்கள். தாங்கள் கற்றதை நமக்குக் கற்பித்தார்கள். அவர்கள் அமைத்துக்கொடுத்த பாதையில்தான், கல்வி உரிமைகளைக் காக்கும் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

நம்மை வழிநடத்திவரும் அந்த ஆசிரியர்களை நாம் தந்தை. அண்ணல், அறிஞர். கலைஞர் என அடைமொழிகள் இட்டு அழைத்து மகிழ்கிறோம். அவர்களிடம் படித்த பகுத்தறிவுப் பாடங்களைக்கொண்டு, சுயமரியாதைக் கேடயங்களை ஏந்தி, மீண்டும் நம்முடைய கல்வி உரிமைகளுக்காகக் களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கும் நல்லதொரு தலைவரைப் பெற்றிருக்கிறோம். அந்தத் தலைவரின் பாசறையில் அரசியல் பயிலும் மாணவனாக, சமூக நீதியை அடித்தளமாகக்கொண்டு உருவான தமிழ்நாட்டின் கல்விக்கூடங்களில் படித்து உருவான ஓர் இளைஞனாகவே இந்த நூலை எழுதத் தொடங்கினேன்.

தமிழ்நாட்டின் சமத்துவக் கல்விக்கான போராட்டத்தின் பகுதி என்கிற வகையில், ‘தேசிய கல்விக் கொள்கை-2020’ ஆவணத்தை வாசித்து ஆய்ந்து, அது ஏற்படுத்த நினைக்கும் தாக்கங்களை உள்வாங்கி உணர்ந்து தெளிந்தே இந்த நூலை எழுதியுள்ளேன்.

எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

மதவாத அமைப்புகளின் விருப்பத்திற்கேற்ப, தேசிய கல்விக் கொள்கை-2020 உருவாக்கப்பட்டிருப்பதையும் அதனை சர்வாதிகார மனோபாவத்துடன் ஒன்றிய அரசு மாநிலங்கள் மீது திணிப்பதையும், அந்தக் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களை வஞ்சிக்கும் விதமாக, நியாயமாகக் கொடுக்க வேண்டிய நிதியை வழங்காமல் மாணவர்கள் -ஆசிரியர்களின் எதிர்காலத்தைச் சிதைப்பதையும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற நோக்கம்தான் இந்த நூலை எழுதுவதற்கான அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

நம்முடைய அரசியலமைப்பின் கீழ், கல்வி என்பது தற்போது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான அதிகாரப் பகிர்வுப் பட்டியலில் இருக்கிறது. ஒன்றிய அரசு கல்விக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புமேயானால், அது மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே, மாநில உரிமைகளைப் பறிக்காத வகையில் அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநில மக்களின் நலன்களைப் பாதிக்காத வகையில், கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து, தேசிய கல்விக் கொள்கையை இயற்ற முன்வந்திருக்க வேண்டும். ஆனால், எந்தவித ஜனநாயக மாண்புகளுமின்றி ‘தேசியக் கல்விக் கொள்கை-2020-ஐ எதேச்சதிகாரத்துடன் அமல்படுத்துகிறது ஒன்றிய பாஜக அரசு.எங்கள் கல்வி… எங்கள் உரிமை! தேசிய கல்விக் கொள்கை-2020 தொடர்பாக மாநில அரசுகளிடம் முறையாகக் கருத்து கேட்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் ஒரு வரி விவாதம்கூட இல்லை. இதுநாள் வரை மாநில அரசுகள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும், சட்டங்கள் வழியாகவும் திட்டங்கள் வழியாகவும் உருவாக்கிவைத்திருக்கும் அத்தனை முன்னேற்றங்களையும் துடைத்தெறிந்து, எதிர்காலச் சந்ததிகளின் கல்விக் கனவுகளைச் சுக்குநூறாக உடைத்தெறிகிறது NEP-2020.

இந்திய அளவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ‘சமமான கல்வி’ சென்று சேர்வதே இன்னும் முழுமையாக நிறைவேறாத கனவாக இருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு உருவான அரசியல் சாசனம், ’14 வயது வரையிலான அனைத்துச் சிறார்களுக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. அதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் கல்வியின் மூலமாக மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கும் பணியை திராவிட இயக்கம் தொடங்கிவிட்டது. கல்விக்கூடங்கள் அனைத்துத் தரப்பினருக்குமானதாக மாறவும், தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைவருக்கும் சமத்துவமான கல்வி கிடைக்கவும் திராவிட இயக்க முன்னோடிகள் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும் களப்போராட்டங்களும் அளப்பரியவை.எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

தென்னாட்டில் மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் தலைவர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர், பெருந்தலைவர் காமராஜர் உள்பட தமிழ்நாட்டின் கொள்கைத் தலைவர்களும் தமிழ்நாட்டை ஆட்சிசெய்த மாண்புமிகு முதலமைச்சர்களும், பள்ளிக் கல்வித் துறையை வழிநடத்திய இனமான பேராசிரியர் உள்ளிட்ட என் முன்னத்தி ஏர்களான மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை வலிமைப்படுத்த, கொள்கை ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரும்பாடுபட்டிருக்கிறார்கள்.

நீதிக்கட்சி ஆட்சியில்தான், கல்வியில் அனைத்துச் சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1920-ஆம் ஆண்டில் ‘மாகாண தொடக்கக் கல்விச் சட்டம்’ இயற்றப்பட்டு, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளி, ஆசிரியர், கல்வித் துறை. கல்வித் திட்டம் போன்றவை வரையறுக்கப்பட்டது. சமூக நீதியை அடிப்படையாகக்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி கற்கும் வாய்ப்பு உருவானது. மிகக் குறிப்பாக, பெண் கல்விக்கான அடித்தளத்தை நீதிக்கட்சி முன்னோடிகள் அமைத்தனர். உயர்கல்விக்காக ஆந்திரப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்டன.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில், இந்தியக் கல்வி முறையில் இருந்த சமூக ஆதிக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார் தந்தை பெரியார். கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்; அடித்தட்டு மக்களிடம் எளிதில் சென்றடைய வேண்டுமென்று மேடைதோறும் முழங்கினார். ‘கல்வி என்பது மூடநம்பிக்கைகளையும், அறிவியலுக்குப் புறம்பான பழைய கருத்துகளையும் ஒழிக்க உதவும் ஒரு கருவியாக இருக்க வேண்டும்’ என்பது பெரியார் நமக்குச் சொல்லிச் சென்ற பாடமாக இன்றும் தொடர்கிறது.எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

இதற்கிடையே கல்வியின் வழியாக நம் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நீதிக்கட்சி வழிவந்து, பெரியாரின் தளபதியாக தமிழ்நாட்டின் அரசியல் களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட பேரறிஞர் அண்ணா, மொழிப்போரின் முன்களப் போராளியாக நின்றார். 1967-இல் அண்ணா தலைமையில் கழகம் முதல்முதலாக ஆட்சிக்கு வந்தபோது தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கி, எந்த மொழியும் நம் மீது திணிக்கப்பட முடியாதபடி மாநில உரிமைகளுக்கு அடித்தளமிட்டார்.

பேரறிஞரின் இந்தத் தொலைநோக்குச் சிந்தனையும், திறன்மிகு நடவடிக்கைகளும் இன்று வரை நம்முடைய கல்வி உரிமையைக் காக்கும் கேடயமாக விளங்குகின்றன. ‘கல்வி எனும் நீரோடை அனைவருக்கும் பொதுவானது. மாறாக அது கங்கா புத்திரர்களின் கமண்டல நீராக, ஒரு சாராருக்கானதாகத் தேங்கிவிடக் கூடாது. குளத்தை வெட்டுபவனுக்கு, குளத்து நீரை உபயோகிக்கும் உரிமை வேண்டும்’ என கல்விச்சாலைகளில் அன்றிருந்த நிலைமைகளைப் புள்ளிவிபரங்களோடு அடுக்கி, நிலைமையைத் தலைகீழாக மாற்றிக் காட்டினார் அண்ணா.

அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த கல்வி வளர்ச்சி மகத்தானது. தமிழ்நாட்டின் கடைக்கோடிக் கிராமத்தில் வாழ்பவர்களும் ‘கலைஞரின் கல்வித் திட்டங்களால் பயனடைந்தோம் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திக்காட்டினார். தமிழ்நாடெங்கும் பள்ளிகளைப் பரவலாக்கிய அவருடைய சாதனை மகத்தானது.

சமூக நீதியுடன் அனைவருக்கும் சமமான கல்வி என்ற நோக்கத்துடன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப் புரட்சியையே ஏற்படுத்திய சமச்சீர் கல்வித்திட்டம் தொடங்கி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது, நுழைவுத்தேர்வு ரத்து, இலவச பஸ் பாஸ், சீருடை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணச் சலுகை, அரசுப் பணிகளில் முன்னுரிமை, பெண்களுக்குத் தொழிற்கல்வி, சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம் எனப் பள்ளி செல்லும் வயதில் தொடங்கி, வயது வந்தோர் கல்வி வரை அனைவரின் கல்விக் கனவுகளையும் நிஜமாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் கையெழுத்திட்ட கோப்புகளாலும் தமிழ்நாடெங்கும் கட்டியெழுப்பிய கல்விக் கோட்டைகளாலும் கல்வி சிறந்த தமிழ்நாடு என்று நம் மாநிலத்தின் அடையாளம் பொலிவு பெற்றது.எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

அன்று தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் அமைத்த அடித்தளத்தின் மீது முத்தமிழறிஞர் கலைஞர் கட்டுமானங்களை உருவாக்கினார். இன்று அந்தக் கல்விப் பாசறைகளிலிருந்து வீரர்களை உருவாக்கும் தலைமை வீரராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் விளங்குகிறார். தமிழ்நாட்டின் கல்வித் துறையினை மேம்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டுவரும் முற்போக்கு நடவடிக்கைகளாலும், முன்மாதிரித் திட்டங்களாலும் சமூக நீதி, சமநீதியோடு. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கினை முதன்மையாகக்கொண்டு, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி இதுவரை இல்லாத அளவில் முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது.

ஒரு நாடு தனது கல்வித் திட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது காலத்தின் தேவை கருதி ஏற்படுத்தப்படும் முன்னேற்ற நடவடிக்கைதான்; மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த மாற்றம் மக்கள் நலனை முதன்மையாகக்கொண்டதாக இருக்க வேண்டும். வெளிப்படையான நடவடிக்கைகளின் மூலம் அந்த மாற்றம் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட கல்விமுறை, ஒரே நேரத்தில் மாணவச் சமுதாயம் உலக அறிவுடன் இணைந்து பயணிக்கவும், தன் வேர்களோடு பிணைந்து நிற்கவும் உதவக்கூடியதாக அமைய வேண்டும். ‘சுதந்திரம்’. ‘சமத்துவம்’ மற்றும் ‘சகோதரத்துவம் இவற்றோடு ‘பகுத்தறிவு’. ‘சுயமரியாதை’ ஆகிய ஜனநாயகக் கொள்கைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்துக்கும் முற்றிலும் முரணாக பிற்போக்கு, மதவாத அமைப்புகளின் விருப்பத்துக்குரிய ஆவணமாக, தேசிய கல்விக் கொள்கை-2020 உருவாக்கப்பட்டிருக்கிறது.எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

2016-ஆம் ஆண்டு வெளியான தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தொடங்கி, தேசிய கல்விக் கொள்கை-2020 ஆவணம் அமல்படுத்தப்பட்டது வரையிலான அனைத்து திட்டங்களிலும் RSS அமைப்புகளின் நிழல் அதிகாரம் பரந்து விரிந்திருக்கிறது. அதனை பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

குறிப்பாக ‘பல்வகை நுழைவு… பல்வகை வெளியேற்றம்’ (Multiple Entry… Multiple Exit) என்கிற பெயரில் மாணவர்களைக் கல்விச்சாலைகளைவிட்டுத் துரத்தும் No Education Policy-யாக அமைந்திருக்கிறது NEP-2020. இது தேசியக் கல்விக் கொள்கை அல்ல; அது சங் பரிவார்களின் காவிக் கொள்கை. 2016-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறைகூவல் விடுத்ததுபோல, தேசிய கல்விக் கொள்கை-2020 என்ற பெயரில் ‘மதவாதிகளால் தமிழ்நாட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்ட ‘மதயானை’தான் இந்த NEP-2020.

ஏற்கெனவே ‘நீட்’ நுழைவுத் தேர்வு எனும் அநீதியின் மூலமாக நம் பிள்ளைகளின் மருத்துவக் கல்விக் கனவுகளைச் சிதைத்து, மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை பாஜக அரசு பறித்துவருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தையும் களப் போராட்டத்தையும் இன்றளவும் நமது மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணிச்சலுடன் நடத்தி வருகிறார். ஒன்றியத்தை ஆள்பவர்கள் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் நலனுக்கு எதிரான முயற்சிகளை மேற்கொள்ளும்போதெல்லாம் சமூக நீதியையும் பகுத்தறிவையும் பக்கத் துணையாகக்கொண்டு, ‘கல்வி எங்கள் ஆயுதம்… கழகம் எங்கள் கேடயம்’ என்று முழங்கிவருகிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்.

எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று. PM SHRI பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால்தான், ரூ.2.152 கோடி, ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்துக்கான ஒன்றிய அரசின் நிதி விடுவிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், ‘இரண்டாயிரம் கோடி ரூபாய் அல்ல… நீங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொடுப்பதாகச் சொன்னாலும் நீங்கள் சொல்லும் ஒப்பந்தத்தில், நாங்கள் கையெழுத்துப் போட மாட்டோம். அப்படிக் கையெழுத்துப் போட்டால், இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமூகம் சென்றுவிடும். அதை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். ஒன்றிய அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியைத் தர மறுத்தால்… எனது தலைமையிலான மாநில அரசே வழங்கும்” என்று அறிவித்து மாணவர்-ஆசிரியர் சமூகத்தின் அரணாக நின்றார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.

2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு, சொன்னபடி நிதியையும் பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடுசெய்து, நம்முடைய மாணவச் செல்வங்களின் தாயுமானவராக நின்று. அவர்களை அரவணைக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். ஒன்றியத்தை ஆள்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது நீட்டுகிற பக்கங்களிலெல்லாம் கையெழுத்துப் போடுகிற அடிமைகளின் அரசு அல்ல. இது சுயமரியாதை மிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் ‘திராவிட மாடல்’ அரசு.

எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையால் தமிழ்நாடு மட்டுமல்ல… நாடெங்கிலும் உள்ள மாணவச் செல்வங்களின் எதிர்காலமும் சிதைக்கப்பட்டு வருகிறது. அவர்களும் நமது பிள்ளைகள்தான். அந்தப் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவும் அவர்களின் கல்வி உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது தமிழ்நாடு. அந்த வகையில் மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர் இருவருடைய கரங்களை வலுப்படுத்தும்விதமாக, ‘தேசிய கல்விக் கொள்கை-2020’ ஆவணத்தைப் படித்து, அதனால் ஏற்படப்போகும் எதிர்காலப் பாதிப்புகளை உள்வாங்கி, அதிலுள்ள பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு பகுதிகளில், ‘பள்ளிக் கல்வி’யின் உள்ளடக்கப் பக்கங்களுக்குள் ஒன்றியத்தை ஆள்பவர்கள் மறைத்துவைத்திருக்கும் வஞ்சகமான திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும்விதமாக இந்த நூலை எழுதியிருக்கிறேன்.எங்கள் கல்வி… எங்கள் உரிமை!

மீண்டும் சொல்கிறேன். இந்த நூலை எழுதுவதென்பது தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக அல்ல; அன்பில் கிராமத்தைச் சார்ந்தவன் என்கிற வகையிலும், தமிழ்நாட்டில் பாய்ந்தோடும் காவிரி, கொள்ளிடம் நதிக் கரைகளில் வளர்ந்து, சமூக நீதியின் அடித்தளத்தில் பள்ளிக் கல்வியைத் தொடங்கி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயர்கல்வி வரை கற்றுத் தேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பகுத்தறிவுப் பாசறையில் அரசியல் பயிலும், இந்தத் தமிழ் மண்ணின் பொறுப்புள்ள ஒரு குடிமகனாக என்னுடைய கடமையைச் செய்வதற்காகவே, இந்த நூலை எழுதியிருக்கிறேன்.

எனது அரசியல் ஆசான் சொல்வது போல, ‘கல்விதான் யாராலும் பறிக்க முடியாத மிகப்பெரிய சொத்து. அதை நம் உயிரென… உரிமையெனக் காப்போம்!’

நன்றி,
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய
தேசிய கல்விக் கொள்னை – 2020
எனும் மதயானை
நூலிலிருந்து.

தடை … அதை உடை … புதிய சரித்திரம் படை …

MUST READ